ஐசிசி 2019-ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐந்து மாதங்களுக்கு குறைவாகவே உள்ளது. இந்திய அணி உலக கோப்பை தொடருக்கு பெரிய அளவில் தயாராகி வருகிறது. விராட் கோஹ்லியின் தலைமையின் கீழ் உள்ள வீரர்கள் மூன்றாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. தற்போதைய இந்திய அணி சில அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் மிகவும் திறமையான இளம் வீரர்கள் கொண்ட கலவையாக உள்ளது. உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய அனுபவம் ஒரு சில வீரர்களுக்கு மட்டுமே உள்ளது. இளம் வீரர்கள் தங்களது முதல் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் விளையாடுகின்றனர். எம்.எஸ்.டோனி, விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா ஆகியோரின் அனுபவங்கள் அணிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் விளையாடவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் வீரர்கள் திறமையைக் கவனித்து, யாரைத் தேர்ந்தெடுப்பது என்று தீர்மானிப்பார்கள். அந்த வீரர்கள் இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை தொடருக்கு அணியில் இடம்பெறுவார்கள். பல கிரிக்கெட் வீரர்கள் தற்போது இந்திய தேசிய அணியில் இடம் பெறவில்லை என்றாலும், 2019-ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் 4 வீரர்களை நாம் பார்க்கலாம்.
#4 யுவராஜ் சிங்
2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் தொடர் நாயகன் யுவராஜ் சிங் தற்போது கிரிக்கெட் வாழ்க்கைத் தரவரிசையில் கீழே இறங்கி வந்து தேசிய அணிக்கு திரும்புவதற்கு போராடி வருகிறார். யுவராஜ் சிங் 19 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் அனைத்து போட்டிகளிலும் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு உடல்நல பிரச்சினைகள் காரணமாக அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் இருந்தார். 2015 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறி, பின்னர் 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் மீண்டும் வருபவராக இருந்தபோதிலும், இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியில் நிரந்தரமாக இடம் பெறாமல் அவரது இடம் எப்போதும் ஆபத்தில் இருந்தது. இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.
#3 அமித் மிஸ்ரா
அமீத் மிஸ்ரா இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த லெக் ஸ்பின்னர்களில் ஒருவராக கருதப்படுகிறது. வங்கதேசத்தில் நடந்த தொடரில் தொடர்ச்சியான இரண்டு போட்டிகள் மட்டுமே விளையாடினார். பின்னர், அவர் மீண்டும் 2009-ஆம் ஆண்டில் ஒரு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 6 ஆண்டுகளுக்கு பின் அணியில் இடம்பிடித்தார். ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே ஆகியோர் சிறப்பான பந்துவீச்சு காரணமாக அணியில் இடம் பெற முடியாமல் அமித் மிஸ்ரா ஒதுக்கப்பட்டார். ஆனால் 15 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்வில் ஒருநாள் சர்வதேச போட்டியில் அமித் மிஸ்ரா 34 போட்டிகளில் வியக்கத்தக்க சராசரியாக 23.61 மற்றும் 64 விக்கெட்கள் எடுத்துள்ளார்.
தேசிய அணிக்காக அவரது கடைசி போட்டி 2016-ஆம் ஆண்டில் நியூசிலாந்திற்கு எதிராக இருந்தது, அந்த போட்டியில் அவர் 18 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் எடுத்தார், இது இந்திய அணி வெற்றிக்கு உதவியது மற்றும் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். இந்திய அணிக்கு அமித் மிஸ்ரா மீண்டும் தகுதி பெறவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.
#2 ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங் 1998-ஆம் ஆண்டு 18 வயதில் அணிக்கு அறிமுகமானார், மேலும் ஷார்ஜாவில் மூன்று தொடர்ச்சியான போட்டிகளில் சிறப்பாக பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இருப்பினும், 2001/02-ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது உண்மையான முன்னேற்றம் இருந்தது, அந்த டெஸ்ட் தொடரில் 32 விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணி வெல்வதற்கு உதவினார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அணிக்கான விளையாடிய அவர் அனைத்து வடிவ போட்டிகளிலும் 700 விக்கெட்களுக்கு மேல் எடுத்தார். 2011 உலகக் கோப்பையில் முக்கிய பங்கு வகித்த ஹர்பஜன் சிங் அதற்கு பிறகு ரவி அஷ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் பிராக்யன் ஓஜா ஆகியோர் முன்னேற்றம் காரணமாக தேசிய அணியில் அவரது இடத்தை பிடிக்க கடினமாக இருந்தது.
ஹர்பஜன் சிங் கடைசியாக 2015-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் மும்பையில் விளையாடினார். ஐ.பி.எல். தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஹர்பஜன் விளையாடுகிறார்.
#1 எம். எஸ். டோனி
மகேந்திர சிங் டோனி ஒரு சிறந்த கேப்டனாக இருந்து அனைத்து வித போட்டிகளிலும் தேசிய அணியை வழிநடத்தினார்.. வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் 2004-ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் மைதானத்தில் தனது முதல் ஆட்டத்தைத் தொடங்கினார். ஒரு ரன் கூட அடிக்காமல் வெளியேற்றப்பட்ட பிறகு, அவரது வாழ்க்கை மேல்நோக்கி மட்டுமே சென்றது. இந்திய கிரிக்கெட் அணியில் 2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பை, 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் 2013-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆகியவற்றை வென்ற இந்திய அணியை வழிநடத்தினார். மேலும் 3 ஐ.பி.எல் கோப்பைகள் வென்றது அவரை மிகவும் வெற்றிகரமான கிரிக்கெட் வீரராக ஆக்குகிறது.
15 வருட கிரிக்கெட் வாழ்வில் டோனி அனைத்து வித போட்டிகளிலும் 15,000 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். 2014-ஆம் ஆண்டு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், 2017-ஆம் ஆண்டு முதல் 50ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். 2019 உலக கோப்பை போட்டிக்கு பிறகு அவரது கிரிக்கெட் வாழ்க்கை கடைசி கட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
எழுத்து-துருவா
மொழிபெயர்ப்பு-சுதாகரன் ஈஸ்வரன்