டி20 லீக் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் ஸ்டீபன் பிளமிங்! ரசிகர்கள் அதிர்ச்சி!

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் பயிற்சியாளர் பிளமிங் 
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் பயிற்சியாளர் பிளமிங் 

டி20 லீக் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் ஸ்டீபன் பிளமிங் ரசிகர்கள் அதிர்ச்சி

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் பிளமிங் ராஜினாமா செய்துள்ளார்

நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் மற்றும் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் உலகின் பல்வேறு நாடுகளில் நடக்கும் டி20 தொடர்களில் உள்ள அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார். பிக் பாஸ் லீக் தொடரில் நடக்கும் உள்ள மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2015ஆம் ஆண்டு அவர் பொறுப்பேற்றார்.

அவர் பொறுப்பு ஏற்றதில் இருந்து அந்த அணி வளர்ச்சியின் பாதையையே கண்டுள்ளது. 2015 ல் இருந்து இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முன்னேறியுள்ளது. இருந்தாலும் ஒரு கோப்பையையும் அந்த அணி கைப்பற்ற வில்லை.

இந்ந்னிலையில் இதற்கு மேலும் ஒப்பந்த நீட்டிப்பு வேண்டாம் எனவும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார் ஸ்டீபன் பிளமிங்.

இதுகுறித்து மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் தலைவர் எட்டி மெக்யுர் அறிக்கை வெளியிட்டுள்ளார்..

அதில் ' ஸ்டீபன் பிளமிங் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் அற்புதமான சேவகராக இருந்தார்.'

' அவருடைய முடிவை நாங்கள் மதிக்கிறோம், பயிற்சியாளர் பதவியில் இருந்து அவர் விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்'

'எங்கள் அணியில் அவர் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறார்'

' அவரது நினைவுகள் எப்போதும் இங்கு இருக்கும் அவருக்கு நாங்கள் எப்போதும் கடமைப் பட்டு இருப்போம் என்று பேசியுள்ளார் அவர்'

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் பயிற்சியாளர் பிளமிங் 
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் பயிற்சியாளர் பிளமிங்

மேலும் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினாலும் அதே அணியில் அவருக்கு இன்னொரு வேலை கொடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச திறமையை கண்டறியும் பொறுப்பு அந்த அணியில் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த அணியுடன் அவர் தொடர்ந்து ஒரு சில காலம் செயல்படுவார் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த ராஜினாமா குறித்து 45 வயதான ஸ்டீபன் பிளமிங் பேசியுள்ளார் இதுகுறித்து அவர் கூறியதாவது...

அந்த இடத்தில் இருந்து வெளியேற இதுதான் சரியான தருணம் என்று நினைக்கிறேன். மேலும், மற்றொருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டியே தற்போது அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளேன். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தற்போது நல்ல முறையில் கட்டமைக்கப்பட்டவிட்டது. இந்த முறை இறுதிப் போட்டிக்கும் சென்றுவிட்டோம். இறுதிப் போட்டிக்கு சென்று கோப்பையை வெல்லவில்லை என்றாலும் எங்களிடம் தன்னம்பிக்கை வளர்ந்துள்ளது.

அணியில் இருக்கும் நம்பிக்கை வாய்ந்த வீரர்கள் ஒரு குழுவாக இணைந்து உற்சாகத்துடன் அடுத்த சீசனுக்கு தயாராக இருப்பார்கள் என்று நம்புகிறேன். அடுத்த முறை மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு தனது பிரியாவிடை வருத்தத்துடன் தெரிவித்தார் ஸ்டீபன் பிளமிங்.

ஸ்டீபன் பிளமிங் நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக செயல்பட்டவர். கடந்த 1994ஆம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை அந்த அணிக்காக கடுமையாக உழைத்தவர். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

சிஎஸ்கே கேப்டனுடன் அணியின் பயிற்சியாளர் பிளமிங் 
சிஎஸ்கே கேப்டனுடன் அணியின் பயிற்சியாளர் பிளமிங்

மேலும் இவர் இங்கிலாந்தின் மிடில்செக்ஸ், யார்க்ஷயர், நாட்டிங்காம்ஷைர் போன்ற அணிகளுக்காக கவுன்டி தொடரிலும் ஆடியுள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் உருவாக்கிய மிகச் சிறந்த வீரர்களில் இவரும் ஒருவர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் என அனைத்தையும் சேர்த்து 15 ஆயிரம் ரன்களையும் குவித்துள்ளார்.

இவரது தலைமையில் மட்டுமே நியூசிலாந்து அணி ஒரே ஒரு ஐசிசி சர்வதேச தொடரை வென்றுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி நாக் அவுட் கோப்பையை இவரது தலைமையில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now