நடந்தது என்ன?
நாதன் குல்டர் நில்-ற்கு எதிராக ஸ்டிவன் ஸ்மித்தின் பேட்டிங் மிகச்சிறந்ததாக உள்ளது. ஸ்மித்தின் பேட்டிங் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் போலவே உள்ளது என ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு தெரியுமா...
உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இவ்வருடத்தின் தொடக்கத்தில் நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக ஆஸ்திரேலியா சிறப்பான ஆட்டத்தை கையாண்டு தொடரை கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் கிரிக்கெட்டில் விதிக்கப்பட்ட தடையிலிருந்து மீண்டு ஸ்டிவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளது அந்த அணியின் கூடுதல் பலமாகும்.
கதைக்கரு
குல்டர் நில்-ன் பந்துவீச்சுக்கு எதிராக ஸ்டிவன் ஸ்மித்தின் பேட்டிங் குறித்து ஜஸ்டின் லாங்கர் விவாதம் செய்து கொண்டிருந்தார். முன்னாள் இடதுகை பேட்ஸ்மேன் ஜஸ்டின் லாங்கர் கூறியதாவது, உலகக் கோப்பைக்கு முன்பாகவே ஸ்டிவன் ஸ்மித் பேட்டிங்கிற்கு நன்றாக தயராகி விட்டார். அவரது பேட்டிங் ஸ்டைல் சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் ஸ்டைல் போலவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் இனைய தளத்திற்கு ஜஸ்டின் லாங்கர் தெரிவித்தவதாவது,
கடந்த வாரத்தில் பிரிஸ்பேனில் ஸ்டிவன் ஸ்மித் மிகவும் அருமையான பேட்டிங்கில் ஈடுபட்டுவந்தார். நாதன் குல்டர் நில்-ன் பந்துவீச்சுக்கு எதிராக அவரது பேட்டிங்கை பாக்கும் போது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் போலவே இருந்தது. இவர் தற்போது தனது இயல்பான ஆட்டத்திறனிற்கு திரும்பிவிட்டார் என நான் நினைக்கிறேன்.
நியூசிலாந்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஸ்டிவன் ஸ்மித் பேட்டிங் மிகவும் அருமையாக இருந்தது. 29 வயதான பேட்ஸ்மேன் ஸ்டிவன் ஸ்மித் நியூசிலாந்திற்கு எதிராக 89 மற்றும் 91 என இரு சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார். ஆஸ்திரேலிய பயிற்சியாளரும் ஸ்டிவன் ஸ்மித்தின் ஆட்டத்திறனை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஸ்டிவன் ஸ்மித் போன்ற பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளது அணியின் வலிமையை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஸ்மித் பேட்டிங் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்டிவன் ஸ்மித் பற்றி ஆஸ்திரேலிய பயிற்சியாளர் கூறியதாவது,
நியூசிலாந்திற்கு எதிரான 3 பயிற்சி ஆட்டத்திலும் ஸ்டிவன் ஸ்மித்-தின் பேட்டிங் மிகவும் அற்புதமாக இருந்தது. இதனை பார்க்கும் போது கிரிக்கெட்டில் மாஸ்டராக திகழ ஸ்டிவன் ஸ்மித்திற்கு அதிக வாய்ப்புள்ளது. இவர் ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. ஸ்மித் பேட்டிங்கை அதிகம் விரும்புகிறார். அவரது பேட்டிங் நிழல் ஆஸ்திரேலிய மண்ணில் பதிந்துள்ளது. ஸ்டிவன் ஸ்மித் பேட்டிங் ரன் மழை பொழியும் அளவிற்கு உள்ளது. நான் நகைச்சுவை ஏதும் செய்யவில்லை".
அடுத்தது என்ன?
ஆஸ்திரேலிய அணி மே 25 மற்றும் 27ல் நடைபெறவுள்ள உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை-க்கு எதிராக பங்கேற்க உள்ளது. முன்னாள் சேம்பியன் ஆஸ்திரேலிய அணி 2019 உலகக் கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் ஜீன் 1 அன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது.