2019 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே ஐபிஎல் தொடரில் உலகக் கோப்பையில் இடம்பெற்றுள்ள வீரர்களின் ஆட்டத்திறன் மிக முக்கியமான ஒன்றாகும். உலகக் கோப்பைக்கு முன் ஐபிஎல் தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் உலகக்கோப்பையை எதிர்கொள்ள வீரர்களுக்கு முழு நம்பிக்கை கிடைக்கும். அத்துடன் ரசிகர்களிடமும் அவர்களின் மீது மிகுந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் உருவாகும்.
ஹர்திக் பாண்டியா, எம் எஸ் தோனி, யுஜ்வேந்திர சகால், கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஐபிஎல் தொடரில் சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தி வருகின்றனர். சில வீரர்கள் ஐபிஎல் தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் தாங்கள் விளையாடும் ஐபிஎல் அணிக்கும், தங்களது ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் ஒரு பாதி முடிவடைந்த நிலையில் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்று ஐபிஎல் தொடரில் சொதப்பி வரும் வீரர்கள் இனிவரும் போட்டிகளிலாவது தங்களது ஆட்டத்திறனை மெருகெற்றி மிக்க நம்பிக்கையுடன் உலகக் கோப்பையில் களமிறங்க வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோளாகும்.
நாம் இங்கு ஐபிஎல் தொடரில் சொதப்பி வரும் 4 உலகக் கோப்பை இந்திய வீரர்களை பற்றி காண்போம்.
#1 தினேஷ் கார்த்திக்
எதிர்பாரத விதமாக மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ள தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். ஆனால் இந்த சீசனில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு அவரது ஆட்டத்திறன் வெளிப்படவில்லை. அணியின் கேப்டனாக மற்ற வீரர்களுக்கு இவர் பேட்டிங்கில் அசத்த வேண்டும். 9 போட்டிகளில் பங்கேற்று 118.08 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் ஒரெயொரு முறை மட்டுமே 50 ரன்களை கடந்துள்ளார். இதனால் இவரை ஒரு ஃபினிஷராகவும் ரசிகர்கள் ஏற்று கொள்ளவில்லை.
உலகக் கோப்பையில் இவரது தேர்வு பற்று தற்போது பல கேள்விகள் எழுந்துள்ளன. அத்துடன் கிரிக்கெட் ரசிகர்கள் ரிஷப் பண்ட் மாற்று விக்கெட் கீப்பராக அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இனிவரும் ஐபிஎல் போட்டிகளிலாவது தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன் மீதுள்ள இந்த தவறான எண்ணத்தை தினேஷ் கார்த்திக் களைய வேண்டும்.
2019 ஐபிஎல் கிரிக்கெட்
ஆட்டங்கள்: 9, ரன்கள்: 111, சராசரி: 18.50, ஸ்ட்ரைக் ரேட்: 118.08, அதிகபட்ச ரன்கள்: 50
#2 விஜய் சங்கர்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விஜய் சங்கருக்கு நம்பர் 3 மற்றும் நம்பர் 4ல் அதிக வாய்ப்புகள் அளிக்கப்பட்டும் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளமால் தொடர்ந்து சொதப்பி வருகிறார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கில் முழுக்க முழுக்க டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோரையே நம்பியுள்ளது. விஜய் சங்கர் டாப் ஆர்டரில் அவ்வளவாக சோபிக்கவில்லை. 8 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் இதுவரை ஒரு அரைசதங்களை கூட அடிக்கவில்லை.
உலகக் கோப்பை தேர்வு தற்போது நீங்கியுள்ள நிலையில் இனிவரும் போட்டிகளில் இவரது ஆட்டத்திறன் சிறப்பாக வெளிபட்டு உலகக் கோப்பையிலும் 4வது வீரராக அசத்துவார் என நம்பப்படுகிறது.
2019 ஐபிஎல் கிரிக்கெட்
ஆட்டங்கள்: 8, ரன்கள்: 139 ரன்கள், சராசரி: 19.85, ஸ்ட்ரைக் ரேட்: 123.00, அதிகபட்ச ரன்கள்: 40*
#3 புவனேஸ்வர் குமார்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பௌலர் புவனேஸ்வர் குமார் பவர் பிளேவில் விக்கெட்டுகளை வீழ்த்த தடுமாறுகிறார், அத்துடன் டெத் ஓவரில் அதிக ரன்களை தனது பௌலிங்கில் வாரி வழங்குகிறார். கானே வில்லியம்சன் அணியில் இடம்பெறதாதல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சில போட்டிகளில் இவர் கேப்டனாக செயல்பட்டார். அவர் பௌலிங்கில் சொதப்புவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இந்திய உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 3 வேகப்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவராவார். புவனேஸ்வர் குமார் இனிவரும் போட்டிகளில் தனது பழைய ஆட்டத்திறனை மீண்டும் வெளிப்படுத்தி தன் மீது உள்ள தவறான எண்ணத்தை போக்குவார்.
2019 ஐபிஎல் கிரிக்கெட்
போட்டிகள்: 8, விக்கெட்டுகள் 5, சராசரி 51.4, எகானமி ரேட்: 8.29, சிறப்பான பௌலிங்: 2/29
#4 குல்தீப் யாதவ்
குல்தீப் யாதவ் தனது மாயாஜால சுழலை இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக வெளிபடுத்தவில்லை. எந்த மைதானத்திலும் இவரது சுழல் எடுபடவில்லை. சில பேட்ஸ்மேன்கள் இவரது பௌலிங்கை மைதானத்தின் அனைத்து இடங்களிலும் பறக்க விடுகின்றனர். தனது சுழலால் பேட்ஸ்மேனை தடுமாறச் செய்யும் அந்த நுட்பத்தை இவர் இழந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
இருப்பினும் 50 ஓவர் கிரிக்கெட் டி20 கிரிக்கெட்டை விட முற்றிலும் வேறுபட்டது ஆகும். எனவே கண்டிப்பாக குல்தீப் யாதவ் இனிவரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகக் கோப்பையில் மிடில் ஓவரில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொள்வார் என்பது ரசிகர்களின் கருத்தாகும்.
2019 ஐபிஎல் கிரிக்கெட்
ஆட்டங்கள்: 9, விக்கெட்டுகள்: 4, சராசரி 71.5, எகானமி ரேட்: 8.66, சிறப்பான பௌலிங்: 2/41
மேற்குறிப்பிட்ட அனைத்து கிரிக்கெட் வீரர்களும் இனிவரும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். தங்களது முழு ஆட்டத்திறனை வெளிபடுத்தி தங்களது நம்பிக்கை திறனை அதிகபடுத்த வேண்டும்.