டி20 போட்டிகளின் வருகையால் ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டியே சற்று மாறியுள்ளது. இவற்றில் பல வீரர்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஒருமித்த பலத்தை நிருபித்துள்ளனர். விராத் கோலி, ஹாஷிம் அம்லா, ஏபி டிவில்லியர்ஸ், ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், வில்லியம்சன், மற்றும் ஜோ ரூட் போன்ற நிகழ்கால கிரிக்கெட் ஜாம்பவான்கள் அனைத்து மூன்று வடிவிலான சர்வதேச போட்டிகளிலும் கொடி கட்டி பறக்கின்றனர்.
ஒரு சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் டெஸ்ட் போட்டிகளில் தான் சிறந்தவர் என நிரூபிக்க பல்வேறு நுணுக்கங்களையும் அமைதியையும் கற்றுத்தேர வேண்டும். அஜய் ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் மற்றும் ரோஹித் சர்மா போன்ற சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர்கள் கூட டெஸ்ட் போட்டிகளில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினர். அதுபோலவே, டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளையாடி ஒருநாள் போட்டிகளில் சோபிக்க தவறிய 4 இந்திய வீரர்களை வீரர்களை பற்றி காணலாம்.
#1.சேட்டேஷ்வர் புஜாரா:
2013-14 ஆண்டுகளில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரு ஒருநாள் போட்டிகள் மற்றும் வங்கதேச அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் என மொத்தம் ஐந்து ஒருநாள் போட்டிகளில் இடம்பெற்றுள்ளார், இந்த சௌராஷ்டிரா பேட்ஸ்மேன் புஜாரா. அவற்றில், மொத்தம் 51 ரன்களை மட்டுமே இவரால் குவிக்க முடிந்தது. மேலும், இவரது ஸ்ட்ரைக் ரேட் 39.23 என்ற வகையில் படுமோசமாக அமைந்தது. கடந்த 7 வருடங்களாக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழும் புஜாரா, குறைந்த ஸ்ட்ரைக் ரேட் காரணத்தினால் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தமது இடத்தை தக்க வைக்க இயலவில்லை. இது மட்டுமல்லாது, ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி போன்ற தலைசிறந்த வீரர்கள் இந்திய ஒருநாள் அணியில் உள்ளதால் இவருக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவும் இல்லை.
#2.விருத்திமான் சஹா:
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பரான விருத்திமான் சஹா, 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வெறும் 41 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். மேலும், இவரது ஒருநாள் போட்டிகளுக்கான சராசரி 13.6. இது மட்டுமல்லாது, 73.61 என்ற ஸ்ட்ரைக் ரேட் ஒரு டவுன் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு உகந்ததாக இல்லை. கடந்த 15 வருடங்களாக இந்திய ஒருநாள் அணியில் ஒரு நிலையான விக்கெட் கீப்பராக அங்கம் வகித்து வருகிறார், மகேந்திரசிங் தோனி. இதனால், விருத்திமான் சஹாவுக்கு குறைந்தளவே வாய்ப்புகள் அளிக்கப்பட்டாலும், அதனை சரியாக பயன்படுத்த தவறினார். இருப்பினும், தோனியின் டெஸ்ட் ஓய்வுக்கு பிறகு இந்திய அணியின் பிரதான விக்கெட் கீப்பராக இடம் பெற்றும் வருகிறார், சஹா. இதுவரை இவர் விளையாடியுள்ள 32 டெஸ்ட் போட்டிகளில் 75 கேட்சுகளும் 10 ஸ்டம்பிங்க்களும் இவரால் நிகழ்த்தப்பட்டன.