#3.முரளி விஜய்:
2010 முதல் 2015 இடைப்பட்ட காலகட்டத்தில் இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற்று மொத்தம் 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார், தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய். அந்த 17 போட்டிகளில் 339 ரன்களை 21.19 என்ற சராசரியுடன் குவித்துள்ளார். 16 இன்னிங்சில் களமிறங்கிய இவர், ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. சச்சின் மற்றும் சேவாக் போன்ற ஜாம்பவான்கள் ஒருநாள் அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் கூட இவரால் அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. அதிவேகமாக ரன்களைக் குவிக்கும் திறனும் அட்டகாசமான சிக்சர் அடிக்கும் திறனும் இவரிடம் உள்ள போதும், அதனை சரியாக பயன்படுத்தத் தவறினார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் ஒரு நிரந்தர அங்கம் வகித்த முரளி விஜய், பல வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணி வெற்றியைக் குவிக்க உதவினார். மொத்தம் 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 3962 ரன்களை குவித்துள்ளார். மொத்தம் 12 சதங்களை விளாசி உள்ள இவரின் சராசரி 40 என்ற வகையில் உள்ளது.
#4.வாசிம் ஜாபர்:
2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற இவர் மொத்தம் 10 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். இந்திய ஒருநாள் அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக விளங்கிய சச்சின், சேவாக் மற்றும் கங்குலி ஆகியோரின் ஆதிக்கத்தால் சர்வதேச 50 ஓவர் போட்டிகளில் இவரால் இடம் பிடிக்க இயலவில்லை. ஆனால், உள்ளூரில் நடைபெற்ற லிஸ்ட் ஏ போட்டிகளில் 44.89 என்ற சிறந்த ஒரு சராசரியை கொண்டு உள்ளார்.
வலக்கை பேட்ஸ்மேனான இவர்,102 லிஸ்ட் ஏ போட்டிகளில் களமிறங்கி 10 சதங்கள் உட்பட மொத்தம் 4310 ரன்கள் குவித்துள்ளார். 2000ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை நடைபெற்ற 31 டெஸ்ட் போட்டிகளில் பங்கு பெற்று 1944 ரன்களை குவித்துள்ளார். இந்திய மண்ணில் நடைபெற்ற சில போட்டிகளில் இவரது பங்களிப்பால் இந்திய அணி வெற்றி பெற்றது 58 இன்னிங்சில் களமிறங்கி 5 சவங்களையும் குவித்துள்ளார்.