எம் எஸ் கே பிரசாத் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன் முடிவில் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலககோப்பைக்கான பதினைந்து வீரர்கள் கொண்ட இந்திய அணியை அவர்கள் வெளியிட்டனர்.
மேலும் இந்திய அணியின் வலைபயிற்சியின் போது பந்து வீச கூடுதலாக நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியுடன் இங்கிலாந்து செல்லவிருக்கின்றனர். தீபக் சஹார், கலீல் அஹமது, ஆவேஷ் கான் மற்றும் நவதீப் சைனி ஆகிய நால்வரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்று இருக்கின்றனர். இதில் கலீல் அஹமது மற்றும் நவதீப் சைனியின் பெயர்கள் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்ற கருத்துக்கள் தேர்வு குழுவினரால் விவாதிக்க பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஜஸ்ப்ரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே இடம்பெறற்றுள்ளனர். நவதீப் சைனி மற்றும் கலீல் அஹமது இந்திய அணியில் இடம் பெறாவிட்டாலும் வலை பயிற்சியில் நன்கு உதவுவர்.
ஒருவேளை இதைப் பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால்… (ஏன் இவர்கள் வலைப்பயிற்சிக்காக செல்ல வேண்டும்)
இந்திய அணி மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை மற்றுமே தேர்வு செய்துள்ளது மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கின்றது. உலகக்கோப்பை ஓர் நீண்ட தொடர் என்பதால் மூன்று பௌலர்களும் தொடர் முழுவதும் நீண்ட உடல்தகுதி உடன் இருக்கவேண்டியது மிக அவசியம். இவர்களுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் வலை பயிற்சியில் பந்து வீச இந்திய தேர்வு குழு நான்கு பௌலர்களை இந்திய அணியுடன் இங்கிலாந்து அனுப்பவுள்ளது.
கலீல் அஹமது, நவதீப் சைனி, ஆவேஷ் கான் மற்றும் தீபக் சஹார் ஆகிய நான்கு பௌலர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர்கள் நால்வரும் தற்போது ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் தங்களது அணிக்கு சிறப்பான முறையில் பந்துவீசி வருகின்றனர்.
கிரிக்கெட் விளையாடும் அணிகளுக்கு உலகக்கோப்பை தொடர் தான் மிக முக்கியம். அனைத்து அணிகளும் பதினைந்து பேர் கொண்ட தங்களது அணியை சிறந்த முறையில் தேர்வு செய்து கொண்டு வருகிறது. இந்திய அணியும் மிகுந்த நாட்களாக 15 பேர் கொண்ட சிறந்த அணியை தேடிக்கொண்டு வந்தது. கடைசியாக நேற்று பதினைந்து பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.
நான்காம் இடத்தில் விளையாட போகும் வீரர் யார்? என்ற குழப்பம் ரசிகர்கள் மற்றும் தேர்வு குழுவினர் மத்தியிலும் இருந்து வந்தது. அதற்காக பல வீரர்களை இந்திய அணி முயற்சி செய்தது. கடைசியாக விஜய் ஷங்கர் மற்றும் கே எல் ராகுல் ஆகிய இருவரை தேர்வு செய்துள்ளது இந்திய தேர்வுக்குழு. அதிகம் எதிர்பார்க்க பட்ட அம்பத்தி ராயுடு அணியில் இடம்பெறவில்லை.
மேலும் ரிஷாப் பண்டிற்கு வாய்ப்பு தவிர்க்கப்பட்டு அதிக அளவில் அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக்கை இரண்டாம் விக்கெட் கீப்பராக தேர்வு செய்ததும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
உலகக்கோப்பை ஓர் நீண்ட தொடர் என்பதால் இந்திய அணி வீரர்கள் முழு உடல் தகுதியுடன் செயல்பட வேண்டும். தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதால் உலகக்கோப்பையில் முழு உடல் தகுதியுடன் விளையாடுவது பெரிய சவாலாகவே இருக்கும். இதில் முக்கியமாக வேகப்பந்து வீச்சாளர்கள் மூவரும் உலகக்கோப்பை தொடரில் புத்துணர்ச்சியுடன் களமிறங்குவது அவசியம்.