பெரும் எதிர்பார்ப்பிற்கு பிறகு இன்று ஆஸ்திரேலியாவுடன் பிரிஸ்பேனில் களம் கண்டது இந்தியா. ஆஸ்திரேலியா தொடரின் முதல் போட்டியான இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கோலி நீண்ட நாட்களுக்குப் பிறகு பங்கேற்ற டி20 போட்டியாக இன்றைய போட்டி அமைந்தது. ஏனெனில் கடந்த டி20 தொடரில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே நேற்றைய தினமே ஆடும் 12 பேர் கொண்ட அணியை அறிவித்திருந்தது இந்திய அணி. ரோஹித் சர்மா, ஷிகர் தவன், கேஎல் ராகுல் விராட் கோலி என்ற முன்னணி வீரர்களும், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரிலும், க்ருனால் பாண்டியா சுழற்பந்து ஆல்ரவுண்டராகவும் குல்தீப் யாதவ் சுழற்பந்துவீச்சாளராகவும், புவனேஸ்வர் குமார், கலீல் அஹ்மத், பும்ராஹ் ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்களாகவும் இறுதி 11 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றனர்.
இந்திய அணி டாஸ்ஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி பல தருணங்களில் அதிரடியாக களம் கண்டது. மேக்ஸ்வெல் மற்றும் லீன் அதிரடியாக ஆடி ஸ்கோரை ஏற்றினர். மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லிவீஸ் முறைப்படி ஸ்கோரில் சில மாற்றங்களை செய்து 174 ரன்களை டார்கெட்டாக வித்திட்டது. டார்கெட்டை எதிர்கொள்ள களமிறங்கியது இந்திய அணி, 174 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் தோல்வி அடைந்தது.
எனவே இத்தொகுப்பில், இந்தியா தோல்விக்கு வித்திட்ட நான்கு காரணங்களை அலசுவோம்.
4.கோலியின் மந்தமான பில்டிங் மற்றும் பேட்டிங்
கோலி பொதுவாக பீல்டிங்கில் ஒரு கலக்கு கலக்குவார். மைதானத்தில் ஆக்ரோஷத்துடன் தென்படும் இவர் இன்றைய போட்டியில், பீல்டிங்கில் பெரிதும் சொதப்பினார். போட்டி தொடங்கின மூன்றாவது ஓவரில் பும்ரா பந்துவீச்சில் ஆஸ்திரேலிய கேப்டனான பின்ச்-ன் கேட்சை தவறவிட்டார். பின்பு பீல்டிங்கிலும் சற்று மந்தமாகவே காணப்பட்டார் கோலி.
பின்பு பேட்டிங்கில் களமிறங்கிய கோலி ஆஸ்திரேலியா தொடரை ஒரு அரை சதம் அடித்து தொடங்குவார் என்று பலரும் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் வெறும் நான்கு ரன்களை எடுத்து, ஆடம் ஜம்பா சூழலில் வீழ்ந்தார். பெரும்பாலும் சேஸிங்கில் வல்லமை பெற்றவர் கோலி, அவர் இன்று சொதப்பியது இந்திய அணி தோற்றதற்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
3. ரிஷாப் பண்ட்-தின் பொறுப்பற்ற ஆட்டம்
21 வயதான பண்ட் ஐபிஎல் போட்டிகளின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர். பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் அவர் எதிரணிக்கு ஆபத்தை விளைவிக்கும் ஊடுபொருள் என பலரும் இவரை பாராட்டினர். இங்கிலாந்து தொடரில் முதன்முதலாக களம் கண்டு, டெஸ்ட் போட்டிகளில் இவர் இப்படியும் ஆடுவாரா என்று பலரை பிரமிப்படைய செய்தார்.
அவர் ஐபிஎல் ஆடுவதை போல் சர்வதேச போட்டிகளில்(டெஸ்ட் தவிர) இன்னும் ஜொலிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் சொதப்பியிருந்த பண்ட், இந்தப் போட்டியில் ரன்களை குவிப்பார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது.
ஒரு ஓவரில் நன்கு ஆடியிருந்தாலும் அதன்பின்பு வழக்கமான ஆட்டத்தை ஆட ஆரம்பித்துவிட்டார் பண்ட். தினேஷ் கார்த்திகுடன் நல்ல பார்ட்னர்ஷிப்பை மேம்படுத்திய பண்ட் , டை ஓவரில் ரிவர்ஸ் ஸ்கூப் ஆட முற்பட்டு ஆட்டமிழந்தார்.