இந்தியா அணி தோல்விக்கு வித்திட்ட நான்கு முக்கிய காரணங்கள் 

சொதப்பிய கோலி
சொதப்பிய கோலி

2 .மழை மற்றும் DLS முறை

DLS முறை பல அணிகளுக்கு அதிர்ஷ்டத்தையும் பாதகத்தையும் அளிக்கவல்லது .இம்முறையில் பலதரப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இம்முறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியா இன்னிங்சில் 17-வது ஓவர் முதல் பந்தில் மழை குறுக்கிட்டது, எனவே ஆட்ட நேரம் குறைந்ததால் அந்த ஓவரிலேயே(5 பந்துகள் போட்டபின்) ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் முடிவு பெற்றது.

158 ரன்களை அடித்து இருந்த ஆஸ்திரேலிய அணி, DLS முறையில் திருத்தப்பட்ட இலக்காக 174 ரன்களை இந்திய அணிக்கு நிர்ணயித்தது . ஆஸ்திரேலியா அடித்ததை விட 15 ரன்கள் அதிகம்.அதும் அதே 17 ஓவர்களில் தான் அடிக்க வேண்டும்.

இதனால்தான் இந்தியா தோற்றது என்பது கருத்தல்ல, இந்த முறை(DLS) ஒரு அணியினருக்கு மட்டும் சாதகமாக அமையாமல், அனைத்து தரப்பினருக்கும் பொதுவாக அமைய வேண்டும் என்பதே பலரால் வைக்கப்படும் விமர்சனம் ஆகும்.

1.மோசமான பந்துவீச்சு (மிடில் ஓவர்சில் )

Krunal Pandya
Krunal Pandya

இந்திய அணிக்கு மிடில் ஓவர்ஸ் என்று கேட்டாலே ஆகாது போலும், பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் மிடில் ஓவர்ஸ் மிகவும் தலைவலியாக இந்தியாவிற்கு அமைகிறது.

குறிப்பாக இன்றைய போட்டியில் , ஆஸ்திரேலிய அணி வெறும் 38 ரன்களை பவர் பிளே முடிவில் எடுத்திருந்தது அதன்பின்பு பதினோரு ஓவர்களில் 120 ரன்களை எடுத்து குவித்தது.

க்ருனால் பாண்டியா ரன்களை வாரித் தந்தார். கலீலும் முன்னெப்போதும் இல்லாமல் இப்போட்டியில் பெரிதும் அடி வாங்கினார். இவர்கள் ஜோடியாக 97 ரன்களை கொடுத்திருக்கின்றனர். ஆதாவது அணியின் பாதிக்கும் மேற்பட்ட ரன்கள்.

நாளை மறுநாள் ரெண்டாவது டி 20 போட்டி மெல்போர்னில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.