உலகக் கோப்பையில் இந்தியாவின் நான்கு முக்கியமான சாதனைகள்

2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் தோனியின் வெற்றி சிக்ஸர் 
2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் தோனியின் வெற்றி சிக்ஸர் 

#3 உலகக்கோப்பை தொடரில் தனிநபர் அடித்த அதிக ரன்களுக்கான சாதனை

2003ம் ஆண்டு தொடர் நாயகன் விருது வென்ற சச்சின் டெண்டுல்கர் 
2003ம் ஆண்டு தொடர் நாயகன் விருது வென்ற சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடர் மறக்க முடியாத தருணம். அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். அவர் ஆட்டத்தை காண ரசிகர்கள் தொலைக்காட்சி முன் காத்திருந்தனர். அந்த சீசனில் 673 ரன்கள் தனிநபராக எடுத்தார். ஆஸ்திரேலியாவின் மேத்தியூ ஹேடன் 2007ம் ஆண்டு ஏறக்கொறைய சச்சினின் சாதனையை முறியடித்தார். அந்த சீசனில் அவர் 659 ரன்கள் எடுத்து இப்பட்டியலில் 2ம் இடம் பிடிக்கிறார்.

அதே போல் நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2003ம் ஆண்டு 150 ரன்களுக்கு மேல் எடுத்ததால் அதுவும் சாதனையாக கருதப்பட்டது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததால், சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். தொடர்நாயகன் விருது வென்ற சச்சின், இறுதி போட்டியில் சரியாக விளையாடாத காரணத்தால் கோப்பை வெல்லும் வாய்ப்பு பறிபோனது.

#4 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் 300 ரன்கள் பார்ட்னெர்ஷிப்

சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் 
சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட்

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே 4 முறை தான் 300 ரன்களுக்கு மேல் கூட்டணி அமைந்துள்ளது. அதில் 2 முறை 1999 ஆம் நடைபெற்ற உலகக்கோப்பையில் அரங்கேறியது. அந்த இரண்டு முறையும் இந்திய அணி வீரர்கள் இலங்கைக்கு எதிரான குரூப் ஆட்டத்தில் இந்திய ஜோடிகள் கங்குலி மற்றும் டிராவிட் இணைந்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 300 ரன்களுக்கு மேல் எடுத்த ஜோடிகள் என்ற பெருமையை இந்தியாவிற்கு பெற்றுதந்தனர். 318 ரன்கள் கூட்டணி போட்ட இந்த ஜோடி, இருவருமே 140 ரன்களுக்கு மேல் தனிநபராக எடுத்தனர். 183 ரன்கள் எடுத்த கங்குலி, உலகக்கோப்பையில் இந்திய வீரரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக சாதனையில் இடம் பெற்றது.

இவ்விருவரும் நிகழ்த்திய இச்சாதனை, 2015ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் கெயில் மற்றும் சாமுவேல் ஜோடி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முறியடித்தது. 372 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி எடுத்த ரன்களே இன்னும் சாதனையாக உள்ளது.

Quick Links