#3 வீரர்களுக்கு அளிக்கும் நம்பிக்கை
இதுவரை விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி பல டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் பெரும்பாலும் விராட் ஒரே அணியைத் தொடர்ந்து இரண்டு போட்டிகளுக்கு தேர்வு செய்வதில்லை. இதனால் அடுத்த போட்டியில் அணியில் இடம் கிடைக்குமா கிடைக்காதா என்ற குழப்பத்திலேயே வீரர்கள் உள்ளனர். சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 303* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் கருண் நாயர். இருப்பினும் அதன் பிறகு அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.
இதே நிலைமை தான் ரஹானேவிற்கும். அடுத்த ஆட்டத்தில் இடம் கிடைக்குமா கிடைக்காதா என்ற அச்சத்திலேயே பெரும்பாலும் அவர் பேட்டிங் செய்வது போன்ற உணர்வு காணப்படுகிறது. பேட்ஸ்மேன் மட்டுமல்லாமல் பௌலர்களையும் சுழற்சி முறையிலே பெரும்பாலும் மாற்றி வருகிறார் கோஹ்லி. இதற்கு பதில் ஒரு தொடர் முழுவதும் இந்த XI தான் களமிறக்கப்படப்போகிறவர்கள் என்ற அறிவிப்பை அணி சந்திப்பின் போது கலந்து ஆலோசித்து அறிவித்தால், வீரர்கள் எந்த பதட்டமுமின்றி தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்த உறுதுணையாக இருக்கும்.
#4 DRS முடிவு
தற்போது உள்ள கிரிக்கெட் வடிவத்தில் DRS (Decision Review System) முறை பெரும் அங்கம்வகிக்கிறது. குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் இந்த முறை (DRS) இரண்டு அணிகளுக்கும் சாதகமான ஒரு விஷயமாக உள்ளது. ஆனால் விராட் கோஹ்லியை பொறுத்த வரை அப்படி இல்லை. பெரும்பாலும் அவர் தவறான முடிவையே எடுக்கிறார். இதுவரை 93 தடவை (2016ன் பிற்பகுதியிலிருந்து) டெஸ்ட் போட்டிகளில் DRS முறையைப் பயன்படுத்தி உள்ள விராட், 68 தடவை தவறாகக் கணித்துள்ளார். இதில் பௌலர்களின் பங்கும் உள்ளது என்றாலும், முடிவெடுக்கும் பொறுப்பு கேப்டனையே சேரும். இதனை எப்படி சரி செய்ய வேண்டும் என்று மூத்த வல்லுனர்களுடன் விராட் ஆலோசிக்க வேண்டும்.