#2) அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்- 107
ரோஹித் சர்மா அசால்ட்டாக சிக்சர்களை பறக்கவிடும் வல்லமை பெற்றவர் என்பது நம் அனைவரும் அறிந்தததே. இதன் மூலம் இவர் சர்வதேச போட்டிகளில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தற்போது நடைபெற்று முடிந்த மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் கேமோ பால் வீசிய பந்தில் சிக்சர் விளாசியதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமுறை சதமடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். இதன் முன்னர் கெயில் 105 சிக்சர்கள் விளாசியதே அதிகபட்சமாக இருந்தது. அதே போட்டியில் சுனில் நரேன் ஓவரில் மற்றோரு சிக்சர் விளாசினார் இவர். இந்த பட்டியலில் மார்ட்டின் கப்தில் ( 103 சிக்சர்கள் ) மட்டுமே இவருக்கு தற்போது போட்டியாளராக இருப்பார். அதுமட்டுமல்லாமல் நியூஸிலாந்து அணியின் மற்றொரு அதிரடி துவக்க வீரரான முன்ரோவும் ( 92 சிக்சர்கள் ) இந்த பட்டியலில் அடுத்த படியாக உள்ளார்.
#1) அதிக ரன்கள் குவித்த வீரர் - 2,422
2015 உலககோப்பைக்கு பின்னர் ரோஹித் சர்மா டி20 போட்டிகளிலும் ரன் மிஷினாக மாறிவிட்டார். கடைசி 4 ஆண்டுகளில் மட்டும் இவர் டி20 போட்டிகளில் 1,555 ரன்கள் குவித்துவிட்டார். இதன் மூலம் அதிக ரன்கள் குவித்த வீரராக இருந்த விராட் கோலி மற்றும் சோஹிப் மாலிக் என அனைவரையும் கடந்து முதலிடத்தை தன்வசமாக்கினார் இவர். இவர் இந்திய மண்ணை காட்டிலும் வெளிநாட்டு தொடரிலேயே அதிக ரன்கள் குவித்துள்ளார். வெளிநாட்டு மண்ணில் மட்டும் இவர் 1,705 ரன்கள் குவித்துள்ளார். இதன் சராசரி 34.79. சேசிங்-ல் இவர் 1009 ரன்களும் குவித்துள்ளார்.