இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் 2019 உலக கோப்பை தொடர் முதல் பாதியை தற்போது எட்டியுள்ளது. இந்த தொடரில் விளையாடும் அணிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துள்ளன. குறிப்பாக, கடும் மழை அவ்வப்போது பெய்து வருவதால் கடந்த வாரத்தில் மூன்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் தலை சிறந்த அணிகளாக விளங்கி வருகின்றன. அதுமட்டுமின்றி, நியூசிலாந்து அணியும் தங்களது பலத்தை நிரூபித்து எவராலும் தோற்கடிக்க முடியாத அணியாகவே திகழ்ந்து வருகிறது. எனவே முதல் சில வாரங்களில் நடைபெற்ற குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைப் பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.
#1.வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அபார முன்னேற்றம்:

கடந்த சில ஆண்டுகளாகவே வெஸ்ட் இண்டீஸ் அணி சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து ஏமாற்றத்தை அளித்து வரும் அணிகளில் ஒன்றாக விளங்கி வந்தது. கடந்த சில வருடங்களாகவே உலக கோப்பை தொடர்களில் தங்களது ஆதிக்கத்தினை செலுத்த தவறிய வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது புத்துணர்ச்சியுடன் திரும்பி அபாரமாக விளையாடி வருகிறது. இந்த அணியின் மூத்த வீரர்கள் இளம் வீரர்களுக்கு உந்து கோலாக அமைந்து அவ்வப்போது போதிய ஆலோசனைகளை வழங்கி ஒரு புதுவித அனுபவத்தை ரசிகர்களுக்கு அளிக்கின்றனர். ஆந்திரா ரசல், "யுனிவர்சல் பாஸ்" என்று வர்ணிக்கப்படும் கிறிஸ் கெய்ல் மற்றும் விக்கெட் கீப்பர் சாய் ஹோப் போன்ற பேட்ஸ்மேன்களால் இந்த அணியின் பேட்டிங் சற்று வலிமை பெற்று உள்ளது. இந்த அணியின் பேட்டிங் மட்டுமே சிறக்கும் என பலரும் நினைத்த வேளையில், பவுலிங்கிலும் கூடுதல் பலத்துடன் விளங்கி வருகிறது, வெஸ்ட் இண்டீஸ். அணி கேப்டன் ஜாசன் ஹோல்டர், ஓசோன் தாமஸ் மற்றும் காட்ரெல் ஆகியோரின் துள்ளிய பந்துவீச்சை தாக்குதலால் எதிர் அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்களை இழந்த வண்ணம் உள்ளனர். அணியில் உள்ள மற்ற வீரர்களான கர்லோஸ் பிராத்வெய்ட், சிம்ரோன் ஹெட்மயெர் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோரும் இந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற போதிய முயற்சியை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2.புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்கள் வகிக்கும் அணிகளே உறுதி செய்யப்பட்டவையா?

அனைவரும் எதிர்பார்த்தபடி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் அணிகளாக தொடர்ந்து தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. அதில் குறிப்பாக, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உச்சகட்ட பார்மில் விளையாடி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வருகின்றது. உலக கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர் துவங்கினால் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கும் அணிகள் முன்பு செயல்பட்டதை போலவே இவ்வகை தொடர்களில் சிறப்பாக செயல்பட சற்று தயக்கம் காட்டி வருகின்றன. மீண்டும் ஒரு முறை ஆஸ்திரேலிய அணி தங்களது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றி பெற்று முன்னணியில் இருந்து வருகிறது. எனவே, இந்த நான்கு அணிகள் மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்று கூறிவிட முடியாது. ஏனெனில், சமீபத்தில் தங்களது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வங்கதேச அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் அளித்துவருகிறது. அதுமட்டுமின்றி, எந்நேரத்திலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் செயல்படக் கூடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த பட்டியலில் தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவே, இந்த சுற்றின் முடிவில் தான் எந்தந்த அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்று உறுதியாகக் கூறமுடியும்.
#3.கிரிக்கெட் Vs மழை:

இம்முறை உலகக் கோப்பை தொடரை மிகவும் அச்சுறுத்தி வருகிறது, இங்கிலாந்தில் பெய்து வரும் மழை. இதனால், சில ஆட்டங்கள் டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டன. இன்னும் சில ஆட்டங்களில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டும் உள்ளன. ஒட்டுமொத்தத்தில் இதுவரை நடைபெற்றுள்ள 12 சதவீத ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டவையாகும். இன்று நியூஸிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் ஆட்டமும் மழையால் தாமதிக்கப்பட்டு 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. எனவே, இனிவரும் போட்டியிலும் மழையால் பாதிக்கப்படுவதற்கான பெரும்பாலான வாய்ப்புகள் உள்ளன. மழை பெய்வது ஒரு முக்கியமான காரணியாக உள்ளதால் போட்டிகளின் முடிவுகள் சற்று மாறுதலுக்கு உள்ளாக்கப்படும்.
#4.ஒரு அணிக்கு சாதகமாக முடிந்த பல போட்டிகள் :

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2019 உலக கோப்பை தொடர் துவங்கியது. ஆனால், முதல் சுற்றில் குறிப்பிடத்தக்க சில அணிகள் விளையாடும் போட்டிகளின் முடிவுகள் ஒரே அணிக்கு சாதகமாக முடிந்ததை நாம் கண்டுள்ளோம். இதன் மூலம், ஒருவித சலிப்பு ஏற்படுகின்றது. இதுவரை நடந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டியும் வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டியையும் தவிர்த்து, மற்ற எவற்றிலுமே ஆட்டத்தின் கடைசி ஓவர் வரை நீடித்து சுவாரசியமான போட்டியாக முடிவு பெறவில்லை. ஆனால், இவ்வாறு நிகழாமல் இருந்தால் மட்டுமே ஆட்டத்தின் போக்கு மாறி சற்று ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமையும்.