#3.கிரிக்கெட் Vs மழை:

இம்முறை உலகக் கோப்பை தொடரை மிகவும் அச்சுறுத்தி வருகிறது, இங்கிலாந்தில் பெய்து வரும் மழை. இதனால், சில ஆட்டங்கள் டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டன. இன்னும் சில ஆட்டங்களில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டும் உள்ளன. ஒட்டுமொத்தத்தில் இதுவரை நடைபெற்றுள்ள 12 சதவீத ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டவையாகும். இன்று நியூஸிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் ஆட்டமும் மழையால் தாமதிக்கப்பட்டு 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. எனவே, இனிவரும் போட்டியிலும் மழையால் பாதிக்கப்படுவதற்கான பெரும்பாலான வாய்ப்புகள் உள்ளன. மழை பெய்வது ஒரு முக்கியமான காரணியாக உள்ளதால் போட்டிகளின் முடிவுகள் சற்று மாறுதலுக்கு உள்ளாக்கப்படும்.
#4.ஒரு அணிக்கு சாதகமாக முடிந்த பல போட்டிகள் :

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2019 உலக கோப்பை தொடர் துவங்கியது. ஆனால், முதல் சுற்றில் குறிப்பிடத்தக்க சில அணிகள் விளையாடும் போட்டிகளின் முடிவுகள் ஒரே அணிக்கு சாதகமாக முடிந்ததை நாம் கண்டுள்ளோம். இதன் மூலம், ஒருவித சலிப்பு ஏற்படுகின்றது. இதுவரை நடந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டியும் வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டியையும் தவிர்த்து, மற்ற எவற்றிலுமே ஆட்டத்தின் கடைசி ஓவர் வரை நீடித்து சுவாரசியமான போட்டியாக முடிவு பெறவில்லை. ஆனால், இவ்வாறு நிகழாமல் இருந்தால் மட்டுமே ஆட்டத்தின் போக்கு மாறி சற்று ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமையும்.