விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2018ல் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை குவித்துள்ளது. எதிரணிகளுக்கு மிகுந்த நெருக்கடியை அளித்தது இந்திய அணி. 2019ஆம் தொடங்கி மூன்றாவது நாளிலே இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளது.
அடுத்த 365 நாட்களில் இந்திய அணி 9 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் , குறைந்தது 31 ஒருநாள் போட்டிகள்( இந்திய அணி உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் தகுதி பெற்றால் 33 ஒருநாள் போட்டிகள் ) , 17 டி20 சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
நாம் இங்கு 2019 ல் இந்திய அணி பங்கேற்கவுள்ள முழு விவரங்களை இங்கு காண்போம்.
ஆஸ்திரேலியா vs இந்தியா 2018-19
இந்திய அணி 2019ல் தனது முதல் போட்டியை ஆஸ்திரேலிய அணியுடன் ஜனவரி 3ல் சிட்னி மைதானத்தில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளது. ஜனவரி 7ல் டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. அதன்பின் ஆஸ்திரேலிய அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. ஒருநாள் தொடர் ஜனவரி 12 முதல் ஜனவரி 17 வரை நடைபெறவுள்ளது. ஒருநாள் போட்டியுடன் ஆஸ்த்ரெலிய அணியுடனான 2 மாத தொடர் முடிவுக்கு வரும்.
போட்டி அட்டவணை
ஜனவரி 3-7 : ஆஸ்திரேலியா vs இந்தியா , 4வது டெஸ்ட் போட்டி , சிட்னி கிரிக்கெட் மைதானம்
ஜனவரி 12 : ஆஸ்திரேலியா vs இந்தியா , முதல் ஒருநாள் போட்டி , சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி
ஜனவரி 15: ஆஸ்திரேலியா vs இந்தியா , இரண்டாவது ஒருநாள் போட்டி , அடிலெய்டு ஓவல் மைதானம், அடிலெய்டு
ஜனவரி 17: ஆஸ்திரேலியா vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் போட்டி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்
நியூசிலாந்து vs இந்தியா-2019
ஆஸ்திரேலிய தொடரைத் தொடர்ந்து இந்திய தாஸ்மானியன் நதி வழியாக நியூசிலாந்திற்கு சென்று 5 ஒருநாள் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்க உள்ளது. ஒருநாள் தொடர் ஜனவரி 23ல் தொடங்கவுள்ளது. டி20 தொடர் பிப்ரவரி 6ல் தொடங்கி பிப்ரவரி 10ல் முடிவடைகிறது.
ஜனவரி 23 : நியூசிலாந்து vs இந்தியா , முதல் ஒருநாள் போட்டி , மெக்லீன் பார்க் , நேப்பியர்
ஜனவரி 26: நியூசிலாந்து vs இந்தியா , இரண்டாவது ஒருநாள் போட்டி, பே ஓவல் , மவுண்ட் மௌனன்குய்
ஜனவரி 28: நியூசிலாந்து vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் போட்டி ,மவுண்ட் மௌனன்குய்
ஜனவரி 31: நியூசிலாந்து vs இந்தியா , நான்காவது ஒருநாள் போட்டி,செடன் பூங்கா, ஹாமில்டன்
ஜனவரி 3: நியூசிலாந்து vs இந்தியா, ஐந்தாவது ஒருநாள் போட்டி ,வெஸ்ட்பாக் ஸ்டேடியம், வெலிங்டன்
ஜனவரி 6: நியூசிலாந்து vs இந்தியா, முதல் டி20,வெஸ்ட்பாக் ஸ்டேடியம், வெலிங்டன்
ஜனவரி 8: நியூசிலாந்து vs இந்தியா, இரண்டாவது டி20,ஈடன் பார்க், ஆக்லாந்து
ஜனவரி 10: நியூசிலாந்து vs இந்தியா, மூன்றாவது டி20,செடன் பூங்கா, ஹாமில்டன்
இந்தியா vs ஆஸ்திரேலியா -2019.
மூன்று மாத கால இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணியுடன் பிப்ரவரி மாத இறுதியில் ஓடிஐ மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இத்தொடர் உலகக் கோப்பை தொடருக்கு ஒரு சிறந்த பயிற்சி ஆட்டமாக இந்திய அணிக்கு அமையும். 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதவுள்ளது. இத்தொடர் பிப்ரவரி 24ல் தொடங்கி மார்ச் 13 அன்று முடிவடைகிறது.
பிப்ரவரி 24: இந்தியா vs ஆஸ்திரேலியா , முதல் ஒருநாள் போட்டி , பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் ஐஎஸ் பிந்ரா மைதானம் , மொகாலி
பிப்ரவரி 27: இந்தியா vs ஆஸ்திரேலியா, இரண்டாவது ஒருநாள் போட்டி, ராஜிவ் காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத்
மார்ச் 2: இந்தியா vs ஆஸ்திரேலியா, மூன்றாவது ஒருநாள் போட்டி, வீசிஏ மைதானம், நாக்பூர்
மார்ச் 5: இந்தியா vs ஆஸ்திரேலியா, நான்காவது ஒருநாள் போட்டி, ஃபெரோஜ் ஷா கோட்லா , டெல்லி
மார்ச் 8: இந்தியா vs ஆஸ்திரேலியா, ஐந்தாவது ஒருநாள் போட்டி, ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானம் காம்ப்ளக்ஸ், ராஞ்சி
மார்ச் 10: இந்தியா vs ஆஸ்திரேலியா, முதல் டி20, எம். சின்னசாமி மைதானம், பெங்களூரு
மார்ச் 13: இந்தியா vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டி20, டாக்டர். வை.எஸ். ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானம், விசாகப்பட்டினம்
இந்தியா vs ஜிம்பாப்வே -2019
15 வருடங்களுக்குப் பிறகு ஜிம்பாப்வே அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 1டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான போட்டி அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இத்தொடர் ஐபிஎல் போட்டித் தொடருக்கு முன்னதாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தொடர் இந்திய வீரர் தோனிக்கு இந்திய மண்ணில் கடைசி சர்வதேச தொடராக அமைய நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன
இந்தியன் பிரீமியர் லீக் -2019
2019ன் ஐபிஎல் தொடர் மார்த் மாதத்தில் தொடங்கி மே மாதத்தின் 2வது அல்லது 3வது வாரத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது . 2019ல் உலகக் கோப்பை தொடர் நடைபெறவிருப்பதால் ஐபிஎல் தொடரில் சில வீரர்கள் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது . ஐபிஎல் மார்ச் 29 ல் தொடங்கி மே 19ல் முடிவடையும் என தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் இந்த வருடம் இந்தியாவில் நடைபெறாது. ஏனெனில் பாராளுமன்ற தேர்தல் இந்தியாவில் நடைபெறவிருப்பதால் தென்னாப்பிரிக்கா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்ற வாய்ப்புள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை -2019
2019 ஐபிஎல் தொடரை தொடர்ந்து இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது . 2019 ஐபிஎல் தொடரில் கடந்த உலகக் கோப்பை தொடரின் சாம்பியன் ஆஸ்திரேலியா , 2017ஆம் ஆண்டின் மினி உலகக் கோப்பை சாம்பியன் பாகிஸ்தான் , இந்தியா, இலங்கை, இங்கிலாந்து , ஆப்கானிஸ்தான் , மேற்கிந்தியத் தீவுகள் , தென்னாப்பிரிக்கா , வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகள் பங்கேற்கவுள்ளன. உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் மே 30ல் தொடங்கி ஜுலை 14 ல் முடிவடைகிறது . இந்திய அணி லீக் போட்டிகளில் அனைத்து அணியுடனும் ஒரு போட்டியில் பங்கேற்கிறது. லீக் போட்டிகளின் முடிவில் எந்த அணி முதல் நான்கு இடங்களை பிடிக்கின்றனவோ அந்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : மேற்கிந்தியத் தீவுகள் vs இந்தியா -2019
உலகக் கோப்பை தொடரைத் தொடர்ந்து இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதனை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இந்த தொடரில் இடம்பெற்றுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 2019 முதல் 2021 வரை நடைபெறவுள்ள டாப் 8 டெஸ்ட் அணிகள் விளையாடும் டெஸ்ட் போட்டிகளை கணக்கில் எடுத்துக் கொண்டு 2021 பாதியில் தகுதி பெறும் இரு அணிகளுக்கு 2021 இறுதியில் இறுதிப்போட்டி நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா vs தென்னாப்பிரிக்கா -2019
ஆகஸ்டில் முடிவடையும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்குப் பிறகு இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடும். இத்தொடரில் நடைபெறும் 3 டெஸ்ட் போட்டிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்-பிற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்தத் தொடரில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணியுடன் விளையாடுகிறது. பின்னர் 2020ல் ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நடைபெறும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வங்கதேசம் vs இந்தியா
தென்னாப்பிரிக்க தொடர் முடிவடைந்தவுடனே வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இத்தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த தொடர்தான் இந்திய அணிக்கு 2019ல் கடைசி டெஸ்ட் தொடராகும்.
இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள்
மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டி , 3 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதுவே 2019ல் இந்திய அணியின் கடைசி ஒருநாள் மற்றும் டி20 தொடராகும். இதற்கான போட்டி அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்திய அணி இவ்வருடத்தில் மொத்தமாக 98 நாட்கள் சர்வதேச போட்டிகளில் பங்குபெறுகிறது.