உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : மேற்கிந்தியத் தீவுகள் vs இந்தியா -2019
உலகக் கோப்பை தொடரைத் தொடர்ந்து இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதனை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இந்த தொடரில் இடம்பெற்றுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 2019 முதல் 2021 வரை நடைபெறவுள்ள டாப் 8 டெஸ்ட் அணிகள் விளையாடும் டெஸ்ட் போட்டிகளை கணக்கில் எடுத்துக் கொண்டு 2021 பாதியில் தகுதி பெறும் இரு அணிகளுக்கு 2021 இறுதியில் இறுதிப்போட்டி நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா vs தென்னாப்பிரிக்கா -2019
ஆகஸ்டில் முடிவடையும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்குப் பிறகு இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடும். இத்தொடரில் நடைபெறும் 3 டெஸ்ட் போட்டிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்-பிற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்தத் தொடரில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணியுடன் விளையாடுகிறது. பின்னர் 2020ல் ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நடைபெறும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வங்கதேசம் vs இந்தியா
தென்னாப்பிரிக்க தொடர் முடிவடைந்தவுடனே வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இத்தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த தொடர்தான் இந்திய அணிக்கு 2019ல் கடைசி டெஸ்ட் தொடராகும்.
இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள்
மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டி , 3 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதுவே 2019ல் இந்திய அணியின் கடைசி ஒருநாள் மற்றும் டி20 தொடராகும். இதற்கான போட்டி அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்திய அணி இவ்வருடத்தில் மொத்தமாக 98 நாட்கள் சர்வதேச போட்டிகளில் பங்குபெறுகிறது.