2019ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகி விட்டது. ஐசிசி தொடரான 2020 டி20 உலகக்கோப்பையானது இம்மாதத்திலிருந்து இன்னும் 13 மாதங்களே அப்பால் உள்ளது.
அனைத்து கிரிக்கெட் அணிகளும் இந்த மிகப்பெரிய ஐசிசி தொடருக்காக தங்களை தயார் செய்யும் வகையில் தற்போதிருந்தே சில டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றனர். நியூசிலாந்து vs இலங்கை, இந்தியா vs தென்னாப்பிரிக்கா, இரு முத்தரப்பு சர்வதேச டி20 தொடர்கள் மற்றும் இலங்கை vs பாகிஸ்தான் ஆகிய டி20 தொடர்கள் இம்மாதத்தில் நடைபெற உள்ளன.
மேலும் 2019 செப்டம்பரில் 3வது மற்றும் 4வது ஆஸஷ் டெஸ்ட் போட்டிகளும் நடைபெற உள்ளது. மேலும் ஐசிசி உறுப்பு நாடுகளும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள முத்தரப்பு தொடரில் பங்கேற்க உள்ளன.
இந்திய-மேற்கிந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 3 அன்று முடிவடைகிறது. அதைத்தவிர இம்மாதத்தில் நடைபெறவுள்ள முழு சர்வதேச தொடர்களைப் பற்றி நாம் இங்கு காண்போம்.
தீ ஆஸஷ், 2019
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்த 3 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றியும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள இரு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா 3-1 என தொடரை கைப்பற்றுமா என்பதைக் காண ஆஸ்திரேலிய ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
போட்டி அட்டவணை
செப்டம்பர் 4-8: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, 4வது டெஸ்ட், மான்செஸ்டர்
செப்டம்பர் 12-16: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, 5வது டெஸ்ட், லண்டன்
இலங்கை vs நியூசிலாந்து, 2019
நியூசிலாந்து இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வியை தழுவினாலும், இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. தற்போது இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து இலங்கை நிர்வாக XI அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியுள்ளது.
போட்டி அட்டவணை
செப்டம்பர் 1: இலங்கை vs நியூசிலாந்து, முதல் டி20, பல்லேகல
செப்டம்பர் 3: இலங்கை vs நியூசிலாந்து, இரண்டாவது டி20, பல்லேகல
செப்டம்பர் 6: இலங்கை vs நியூசிலாந்து, மூன்றாவது டி20, பல்லேகல
வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான், 2019
ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக வங்கதேசத்துடன் டெஸ்ட் போட்டியில் மோத உள்ளது. ஆப்கானிஸ்தான் தனது முதல் டெஸ்ட் வெற்றியை அயர்லாந்திற்கு எதிராக பெற்றது. மேலும் வங்கதேசத்திற்கு எதிராக மற்ற வகையான கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. எனவே எதிர்வரும் டெஸ்ட் போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் தனது ஆதிக்கத்தை செலுத்த அதிக வாய்ப்புள்ளது.
போட்டி அட்டவணை
செப்டம்பர் 5-9: வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான், ஒரே டெஸ்ட், சிட்டகாங்
அமெரிக்க முத்தரப்பு தொடர் 2019
ஆப்பிரிக்க அணியான நமீபியா, பப்புவா நியூ கினியா மற்றும் அமெரிக்க அணிகள் முத்தரப்பு தொடரில் விளையாட உள்ளது. இத்தொடர் அமெரிக்காவில் ஒருநாள் தொடராக இம்மாதம் நடைபெற உள்ளது.
போட்டி அட்டவணை
செப்டம்பர் 13: அமெரிக்கா vs பப்புவா நியூ கினியா, முதல் போட்டி, புளோரிடா
செப்டம்பர் 17: அமெரிக்கா vs நமீபியா, இரண்டாவது போட்டி, புளோரிடா
செப்டம்பர் 19: அமெரிக்கா vs பப்புவா நியூ கினியா, மூன்றாம் போட்டி, புளோரிடா
செப்டம்பர் 20: அமெரிக்கா vs நமீபியா, நான்காவது போட்டி, புளோரிடா
செப்டம்பர் 22: நமீபியா vs பப்புவா நியூ கினியா, ஐந்தாவது போட்டி, புளோரிடா
செப்டம்பர் 23: பப்பு நியூ கினியா vs நமீபியா, ஆறாவது போட்டி, புளோரிடா
வங்கதேச முத்தரப்பு தொடர், 2019
ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடருக்கு பின்னர் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள், ஜீம்பாப்வே அணியுடன் இணைந்து சர்வதேச முத்தரப்பு டி20 போட்டியில் விளையாட உள்ளது. இத்தொடர் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு அணிகளை தயார் செய்ய மிகுந்த உதவியாக இருக்கும்.
போட்டி அட்டவணை
செப்டம்பர் 13: வங்கதேசம் vs ஜீம்பாப்வே, முதல் போட்டி, தாக்கா
செப்டம்பர் 14: ஆப்கானிஸ்தான் vs ஜீம்பாப்வே, இரண்டாவது போட்டி, தாக்கா
செப்டம்பர் 15: வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான், மூன்றாவது போட்டி, தாக்கா
செப்டம்பர் 18: வங்கதேசம் vs ஜீம்பாப்வே, நான்காவது போட்டி,சிட்டகாங்
செப்டம்பர் 20: ஆப்கானிஸ்தான் vs ஜீம்பாப்வே, ஐந்தாவது போட்டி, சிட்டகாங்
செப்டம்பர் 21: வங்கதேசம் vs ஜீம்பாப்வே, ஆறாவது போட்டி, சிட்டகாங்
செப்டம்பர் 24: இறுதிப் போட்டி, தாக்கா
அயர்லாந்து முத்தரப்பு தொடர், 2019
ஐரோப்பிய கிரிக்கெட் அசோசியேட் நாடுகளான ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து முத்தரப்பு தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரில் நடைபெறும் 6 போட்டிகளும் இடைவெளியில்லாமல் 6 நாட்களில் நடைபெற உள்ளது.
போட்டி அட்டவணை
செப்டம்பர் 15, அயர்லாந்து vs நெதர்லாந்து, முதல் போட்டி, டப்லின்
செப்டம்பர் 16, ஸ்காட்லாந்து vs நெதர்லாந்து, இரண்டாவது போட்டி, டப்லின்
செப்டம்பர் 17, அயர்லாந்து vs ஸ்காட்லாந்து, மூன்றாவது போட்டி, டப்லின்
செப்டம்பர் 18, அயர்லாந்து vs நெதர்லாந்து, நான்காவது போட்டி, டப்லின்
செப்டம்பர் 19, ஸ்காட்லாந்து vs நெதர்லாந்து, ஐந்தாவது போட்டி, டப்லின்
செப்டம்பர் 20, அயர்லாந்து vs ஸ்காட்லாந்து, ஆறாவது போட்டி, டப்லின்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா, 2019
2019 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் தென்னாப்பிரிக்கா தனது முதல் சர்வதேச தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு எதிராக மோத உள்ளது. செப்டம்பரில் டி20 போட்டிகளிலும், அக்டோபரில் டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட உள்ளன.
போட்டி அட்டவணை
செப்டம்பர் 15: இந்தியா vs தென்னாப்பிரிக்கா, முதல் டி20, தர்மசாலா
செப்டம்பர் 18: இந்தியா vs தென்னாப்பிரிக்கா, இரண்டாவது டி20, மொஹாலி
செப்டம்பர் 22: இந்தியா vs தென்னாப்பிரிக்கா, மூன்றாவது டி20, பெங்களூரு
பாகிஸ்தான் vs இலங்கை, 2019
இலங்கை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் அதைத் தொடர்ந்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இலங்கை பாகிஸ்தானிற்கு நீண்ட வருடங்களுக்கு பின்னர் சுற்றுப்பயணம் செய்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை:
செப்டம்பர் 27: பாகிஸ்தான் vs இலங்கை, முதல் ஒருநாள் போட்டி, கராச்சி
செப்டம்பர் 29: பாகிஸ்தான் vs இலங்கை, இரண்டாவது ஒருநாள் போட்டி, கராச்சி
(மற்ற போட்டிகள் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளது)