செப்டம்பர் 2019ல் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் தொடர்கள்

South Africa will visit India in September 2019
South Africa will visit India in September 2019

அயர்லாந்து முத்தரப்பு தொடர், 2019

Ireland will host The Netherlands and Scotland
Ireland will host The Netherlands and Scotland

ஐரோப்பிய கிரிக்கெட் அசோசியேட் நாடுகளான ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து முத்தரப்பு தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரில் நடைபெறும் 6 போட்டிகளும் இடைவெளியில்லாமல் 6 நாட்களில் நடைபெற உள்ளது.

போட்டி அட்டவணை

செப்டம்பர் 15, அயர்லாந்து vs நெதர்லாந்து, முதல் போட்டி, டப்லின்

செப்டம்பர் 16, ஸ்காட்லாந்து vs நெதர்லாந்து, இரண்டாவது போட்டி, டப்லின்

செப்டம்பர் 17, அயர்லாந்து vs ஸ்காட்லாந்து, மூன்றாவது போட்டி, டப்லின்

செப்டம்பர் 18, அயர்லாந்து vs நெதர்லாந்து, நான்காவது போட்டி, டப்லின்

செப்டம்பர் 19, ஸ்காட்லாந்து vs நெதர்லாந்து, ஐந்தாவது போட்டி, டப்லின்

செப்டம்பர் 20, அயர்லாந்து vs ஸ்காட்லாந்து, ஆறாவது போட்டி, டப்லின்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா, 2019

Ireland will host The Netherlands and Scotland
Ireland will host The Netherlands and Scotland

2019 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் தென்னாப்பிரிக்கா தனது முதல் சர்வதேச தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு எதிராக மோத உள்ளது. செப்டம்பரில் டி20 போட்டிகளிலும், அக்டோபரில் டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட உள்ளன.

போட்டி அட்டவணை

செப்டம்பர் 15: இந்தியா vs தென்னாப்பிரிக்கா, முதல் டி20, தர்மசாலா

செப்டம்பர் 18: இந்தியா vs தென்னாப்பிரிக்கா, இரண்டாவது டி20, மொஹாலி

செப்டம்பர் 22: இந்தியா vs தென்னாப்பிரிக்கா, மூன்றாவது டி20, பெங்களூரு

பாகிஸ்தான் vs இலங்கை, 2019

Pakistan v Sri Lanka - ODI
Pakistan v Sri Lanka - ODI

இலங்கை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் அதைத் தொடர்ந்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இலங்கை பாகிஸ்தானிற்கு நீண்ட வருடங்களுக்கு பின்னர் சுற்றுப்பயணம் செய்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது‌.

போட்டி அட்டவணை:

செப்டம்பர் 27: பாகிஸ்தான் vs இலங்கை, முதல் ஒருநாள் போட்டி, கராச்சி

செப்டம்பர் 29: பாகிஸ்தான் vs இலங்கை, இரண்டாவது ஒருநாள் போட்டி, கராச்சி

(மற்ற போட்டிகள் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளது)

Quick Links