ஓய்வை அறிவித்துச் சில நாட்களை ஆன நிலையில், கவுதம் கம்பிர் எம் எஸ் தோனியை குற்றம்சாற்றியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2012-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் பேங்க் முத்தரப்பு தொடரில் கேப்டனாக செயல் பட்ட தோனியின் முடிவுகளை கேள்விக்குறியாக்கியுள்ளார் ஓய்வு பெற்ற கம்பிர்.
இந்த முத்தரப்பு தொடர் தொடங்குவதுற்கு முன்பாகவே தோனி, அப்போது பேட்டிங்கில் நட்சத்திர வரிசையாக இருந்த சச்சின் டெண்டுல்கர், விரேந்தர் சேவாக் மற்றும் கம்பிரை கூட்டாக அணியில் அமர்த்தமுடியாது என்று குரல் கொடுத்ததாக கம்பிர் சாடினார்.
பில்டிங்கில் நிறைய ரன்கள் விடுவதாக கூறி, அணியில் 3 பேர் (சச்சின்,சேவாக் மற்றும் கம்பிர்) கூட்டாக இடம்பெற தோனி இடம் கொடுக்கவில்லை என்று கூறினார் கம்பீர். மேலும் இதைப்பற்றி கூறிய அவர், தொடர் முழுவதிலும் சுழற்சி முறையில் 3 வீரர்களை தேர்வு செய்து கொண்டிருந்த தோனி, கட்டாயமாக வெற்றி பெறவேண்டிய இலங்கைக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் மூன்று பேரையும் அணியில் தேர்வு செய்திருந்தார் தோனி
போட்டியில் இந்தியா போனஸ் புள்ளிகளுடன் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும் என்று கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டு போனஸ் புலிகளுடன் வெற்றியும் பெற்றிருந்தது இந்தியா. அப்போட்டியில் விராட் கோலி வெறும் 86 பந்துகளில் 133 ரன்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா டுடேவிற்கு பேட்டியளித்த கம்பிர், தோனியின் அப்போதைய முடிவானது எனக்கு பேரதிர்ச்சியை தந்தது என்று குறிப்பிட்டிருந்தார். என்னை பொருத்தவரை ஒரு பிளேயர் நன்றாக விளையாடும் பட்சத்தில் அவரது ஃபீல்டிங் பற்றி கவலைப்பட தேவையில்லை. அந்த பிளேயர் நிச்சயமாக அணியில் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்தார் கம்பிர் .
மேலும் அவர் கூறியதாவது “2012ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் முத்தரப்பு தொடரில், தோனி நாங்கள் மூன்று பேர் (சச்சின், சேவாக், கம்பிர்) ஒரே சமயத்தில் ஆட இயலாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பானது எங்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. 2015ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் உலகக்கோப்பை தொடருக்கு உற்று நோக்கும் வகையில் இம்முடிவை எடுத்ததாக தோனி தெரிவித்திருந்தார். 2015ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முடியாது என்று 2012ஆம் ஆண்டே அறிவிக்கும் கேப்டனை எங்கும் காணமுடியாது. அவரின் அறிவிப்பானது எந்த ஒரு கிரிக்கெட் வீரராக இருந்திருந்தாலும் பேரதிர்ச்சியாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. என்னைப் பொருத்தவரை ஒரு பிளேயர் நன்றாக ஆடுமாயின், அவரது வயது ஒரு பொருட்டல்ல.” என்று தெரிவித்திருந்தார் கம்பிர்.
தோனியின் நிலைத்தன்மையை பற்றி கேள்வி எழுப்பிய கம்பிர் கூறியதாவது, “ஆஸ்திரேலிய தொடரில் முதலில் நடந்த சில போட்டிகளில் எங்களை சுழற்சி முறையில் தேர்வு செய்திருந்தார் தோனி. அதே தொடரில் ஜெயிக்க வேண்டும் என்று கட்டாயமாக இருந்த போட்டியில் எங்களை அணியில் தேர்வு செய்தார் தோனி. நீங்கள் ஒரு முடிவு எடுக்குமானால் அந்த முடிவை பின்தொடர வேண்டும், அதை விட்டுவிட்டு முடிவுகளை அவ்வப்போது மாற்றுவது சரியானதல்ல” என்று கூறினார் கம்பிர்.
“முதலில் ஒரு முடிவு, பின்பு இறுதியில் ஒரு முடிவு என்று குழம்பிப் போயிருந்தார் தோனி, அவரது முதல் முடிவு தவறாக கூட இருக்கலாம் அல்லது இரண்டாம் முடிவு தவறாக கூட இருந்திருக்கக்கூடும்,அவர் கேப்டனாக அம்முடிவை எடுத்தது மூவருக்கும் பேரிடியாக இருந்தது” என்று கூறி இருந்தார் கம்பிர்.
எழுத்து : விக்னேஷ் ஆனந்தசுப்ரமணிய
மொழியாக்கம் : பாஹாமித் அஹமத்