தற்போது உலகக்கோப்பை தொடரானது நிறைவடைந்து ஒரு வாரத்தை கடந்து விட்டது. இருந்தாலும் இன்னும் இந்திய ரசிகர்கள் அந்த தாக்கத்திலிருந்து வெளிவரவில்லை. இந்திய அணி அரையிறுதியிலேயே வெளியேறியது மற்றும் நியூஸிலாந்து இறுதிப்போட்டியில் நூலிழையில் வெற்றிவாய்ப்பை தவறிவிட்டது என்பது தற்போது வரை ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. அதைக்காட்டிலும் மிகப்பெரிய ஹாட் டாபிக் தோனி எப்போது ஓய்வினை அறிவிப்பார் என்பது தான். அதனை பற்றி பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய அரசியல் பிரமுகருமான கவுதம் காம்பிர் கருத்தினை தெரிவித்துள்ளார். அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
மகேந்திர சிங் தோணி-க்கு இதுதான் கடைசி உலககோப்பை என இப்போது அல்ல சில வருடங்களுக்கு முன்னரே பலரும் கூற துவங்கிவிட்டனர். ஆம் இதுதான் அவருக்கு கடைசி உலககோப்பை இதற்கு பின் நடைபெறவிருக்கும் 2023 உலகக்கோப்பை தொடரில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு என்பது இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும்.
இந்த உலககோப்பை தொடருடன் தோணி ஓய்வினை அறிவிப்பார் என இதற்க்கு முன் பேச்சு அடிபடவே இல்லை. ஆனால் தற்போது இந்திய அணி தோற்ற விரக்தியில் தோனி இனி சர்வதேச போட்டிகளில் விளையாட மாட்டார் விரைவில் தனது ஓய்வினை அறிவிப்பார் என்ற கருத்துக்கள் காட்டுத்தீ போல பரவியது. அதிலும் அதிகமாக இந்த பேச்சை எடுத்தவர்கள் தோனி ரசிகர்கள் தான்.
என்ன தான் இந்திய அணி அரையிறுதியில் தோல்வியடைந்தாலும் இந்த உலகக்கோப்பை தொடரில் பல முன்னணி வீரர்கள் மலிங்கா, சோஹிப் மாலிக், இம்ரான் தாஹிர், ஜேபி டுமினி ஆகியோர் தங்களது ஓய்வினை அடுத்தடுத்து அறிவித்தனர். கெயில் மட்டும் இந்தியா உடனான தொடரில் விளையாடிய பின் ஓய்வு குறித்து முடிவெடுப்பேன் என கூறினார். இப்படி பல வீர்ரர்கள் அடுத்தடுத்து ஓய்வினை அறிவித்ததால் இந்திய அணியை பொறுத்தவரையில் அந்த வரிசையில் இடம் பெற்றிருக்கும் ஒரே வீரர் தோனி தான். இதுவே ரசிகர்களை அவரின் ஓய்வினை குறித்து பேச வைத்தது.
ஆனால் அதன் பின் துவங்கி நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் சாதாரணமாக விளையாடி இரண்டு அரைசதங்கள் குவித்தார். இதில் எந்த ஒரு இன்னிங்ஸ்-ம் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. அதிலும் குறிப்பாக அரையிறுதியில் நியூஸிலாந்து அணிக்கெதிரான போட்டியில் ஜடேஜா வுடன் இணைந்து சிறப்பாக விளையாடிய இவர் கடைசியில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி இந்திய ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்த்தினார். தோனியை பொறுத்தவரை கடந்த ஆண்டு வரை சரியாக விளையாடாமல் இருந்தார். இதனால் பல சர்ச்சைகளுக்கும் உள்ளானார். இதற்க்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வண்ணம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வரிசையாக மூன்று அரைசதங்கள் அடித்து தொடர்நாயகன் விருதினையும் வென்று தான் இந்த உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கு தகுதியானவன் தான் என்பதை நிருபித்தார். அதனை தொடர்ந்து உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு பயணித்து விளையாடிய இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் டாப் ஆர்டர் சொதப்ப ராகுல் உடன் இணைந்து சதமடித்து அசத்தினார் தோனி.