அன்றைய போட்டி முடிந்ததிலிருந்து தற்போது வரை எப்போது தோனி ஓய்வினை அறிவிப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அன்றைய போட்டி நிறைவடைந்ததன் பின் இந்திய கேப்டன் விராட்கோலி கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் அவரும் தோனி ஓய்வினை குறித்து எந்த கருத்தினையும் என்னிடம் தெரிவிக்கவில்லை என கூறினார். அதன் பின் பல பிரபலங்களும் தோனியின் ஓய்வினை குறித்து பல கருத்தினை தெரிவிக்க துவங்கினர்.
அந்தவகையில் முன்னாள் வீரரான கவுதம் காம்பிர் இன்று அதுகுறித்து தனது கருத்தினை தெரிவித்தார். அதில் "தோனி கேப்டனாக இருக்கும் போது சச்சின், ஷேவாக் மற்றும் நான் உட்பட பல சீனியர் வீரர்களை அணியிலிருந்து நீக்க காரணமானார். அவர் என்னிடம் 2012 CB தொடரின் போது சச்சின் மற்றும் ஷேவாக் இருவரும் இணைந்து இந்த போட்டியில் விளையாட முடியாது. ஏனென்றால் இந்த மைதானத்தில் உலகக்கோப்பை தொடர்நது நடைபெறவுள்ளதால் அதற்காக இளம் வீரர்களை இப்போது முதலே பயிற்சியளிக்க வேண்டும் என கூறினார். மற்ற வீரர்களை இந்த காரணத்தை காட்டி அணியிலிருந்து வெளியேற வைத்தார் தோனி. எனவே அந்தவகையில் தோனி இம்முறை தாமாக முன்வந்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். ரிஷாப் பந்த், இஷான் கிஷான் மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற பல இளம் விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். அவர்களுக்கும் வாய்ப்பளிக்கலாம். இவர்களை இப்போதிருந்தே அணியில் உபயோகித்தால் தான் அடுத்த உலககோப்பைக்கு இந்தியாவிற்கு அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள். இதனை தோனி உணரவேண்டும்" எனவும் கூறினார்.