முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் தனக்கு விருப்பமான உலக கோப்பை 2019 தொடருக்கான இந்திய அணியை அறிவித்தார். அந்த அணியை பற்றி இங்கு காணலாம். அவரின் உலக கோப்பை அணி விவரம் அவரது அணியில் ரவிச்சந்திர அஸ்வின், கே எல் ராகுலுக்கு கட்டாய இடமுண்டு என கூறினார். அதே போல் தினேஷ் கார்த்திக் , தோனி ஆகியோரும் முக்கிய வீரராக இருப்பர் எனக் கூறினார். ரிஷப் பண்ட மற்றும் ரவீந்திர ஜடஜேவுக்கு இடமில்லை எனக் கூறினார்.
#அணியில் இடம்பெறாத பண்ட்
தற்போது இந்திய அணியின் டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பராக உள்ளவர் ரிஷப் பண்ட். 20 வயதே ஆன இவர் இந்திய அணியில் சிறப்பாக ஆடி அனைத்து ரசிர்களின் மனதையும் வென்றார். இவர் தற்போது டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடித்துள்ளார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இவருக்கு இடமில்லை. ஆனால் இவர் உலக கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என அனைவரும் கூறி வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார் அது குறித்து இங்கு காணலாம்.
2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் அறிமுகம் செய்யப்பட்டார். அந்த தொடரின் இறுதிப் போட்டியில் இவர் சதமடித்து அசத்தினார். அதுமட்டுமின்றி இங்கிலாந்து மண்ணில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சிறப்பையும் பெற்றார். இதன் பின்னர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வரிசையாக இரண்டு முறை 93 ரன்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் இவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சேர்க்கப்பட்டார். ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடாத இவர். டி20 போட்டிகளில் அரைசதம் விளாசி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இதன் பின் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டி29 தொடரில் தோனி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த தொடரில் ரிஷப் பண்ட் சோபிக்கவில்லை.
இதன் பின்னர் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கடைசி போட்டியில் சதம் விளாசினர். இதனால் ரிஷப் பண்ட் உலக கோப்பை அணியில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.
இது குறித்து கம்பீர் கூறுகையில், “ தற்போது வரவிருக்கும் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தோனி, தினேஷ் கார்த்திக் போன்ற சிறந்த வீரர்கள் இருப்பதால் ரிஷப் பண்ட் -க்கு இடமில்லை “ என கூறினார். அதுமட்டுமின்றி “ தோனி தற்போது பார்ம்க்கு திரும்பியுள்ளதால் அவர் அணியின் 4,5 வது இடங்களில் களமிறங்குவார் எனவும், தினேஷ் கார்த்திக் தற்போது இந்திய அணியின் மேட்ச் பினிசராக சிறப்பாக விளையாடுவதால் அவர் 6 வது இடத்தில் களமிறங்குவார் “ எனவும் கூறினார். மேலும் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் செயல்பட வேண்டும் எனவும் கூறினார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி தோனி தற்போது பார்ம்க்கு திரும்பியுள்ளதால் அவருக்கு உலக கோப்பை அணியில் இடம் நிச்சயம். தினேஷ் கார்த்திக் தற்போது சிறப்பாகவே விளையாடி வருகிறார். இவர் 4 வது இடம் மற்றும் மற்றும் 6 வது இடம் என அனைத்து இடத்திலும் விளையாடும் தன்மை பெற்றவர். மிடில் ஆர்டரில் நிதானமாகவும், கடைசி நேரத்தில் பினிசராகவும் செயல்பட்டு அணியை வெற்றி பெற வைக்கும் தன்மை உடையவர் தினேஷ் கார்த்திக்.
எனவே அணியில் இரண்டு பெரிய அனுபவிக்க விக்கெட் கீப்பர்கள் இருக்கும் நிலையில் ரிஷப் பண்ட் உலக கோப்பைக்கு பின் இந்திய அணியில் விளையாடலாம்.