கதை என்ன?
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவான இன்னிங்ஸ்க்கு பின்னர் பரவலாக விமர்சிக்கப்பட்டார் இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பருமான எம்.எஸ் தோனி. இதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி எம்.எஸ் தோனிக்கு ஆதரவு அளித்துள்ளார். உலகக் கோப்பைக்கான ஐ.சி.சி வர்ணனைக் குழுவில் பணியாற்றி வருகிறார் சவுரவ் கங்குலி
உங்களுக்குத் தெரியாவிட்டால் ...
இந்திய அணி மற்றும் ஆப்கானிஸ்தான் அணி சவுத்தாம்டனில் கடந்த சனிக்கிழமை அன்று கடினமான சூழ்நிலையில் போட்டியிட்டனர். இந்த போட்டியில் எம்.எஸ் தோனி 52 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இவரின் இந்த மெதுவான இன்னிங்ஸ் காரணமாக கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுலகர் மற்றும் பலரால் விமர்சிக்கப்பட்டார். இறுதியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இதில் கடைசி ஓவரை வீசிய இந்திய அணியின் முகமது ஷமி தொடர்ந்து மூன்று விக்கெட்களை பெற்றார். இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆட்டநாயகன் பட்டம் பெற்றார்.
கதைக்கரு
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அப்போது இந்திய அணியின் ரோகித் சர்மா 1 ரன்னிலும் கே.எல் ராகுல் 30 ரன்னிலும் வெளியேறினர். இதன் பின் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி 67 ரன்களுடன் வெளியேறினார். ஆட்டத்தின் தொடக்கத்திலே தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்தது. அப்போது விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மனான எம்.எஸ். தோனி களமிறங்கும் போது இந்திய அணி 123-3 என்ற எண்ணிக்கையில் இருந்தது. இந்த தொடரில் விக்கெட்களை தவிர்ப்பதற்காக தோனி நிதானமாக விளையாட திட்டமிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் குல்பாதின் நைப் தனது ஸ்பின்னர்களை வைத்து இந்திய அணியின் நடுவரிசை வீரர்கள் விக்கெட் எடுக்க முயற்சி செய்தார். இதை சமாளித்து விளையாடிய தோனி பல டாட் பந்துகளை சந்தித்தார். ஆனால் ரஷீத் கானுக்கு எதிராக ஒரு பெரிய ஷாட் விளையாட முயற்சி செய்த போது அவர் விக்கெட் இழந்ததால் இறுதியில் கூட அவர் வேகத்தை அதிகரிக்கத் தவறினார்.
இதனால் இந்திய அணியால் 250 ரன்களை எட்ட முடியாமல் போனது. இதற்கு பல தரப்பில் எம்.எஸ் தோனியின் மொதுவான இன்னிங்ஸ் தான் காரணம் என்று கூற தொடங்கினர். அப்போது தோனிக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி குறல் கொடுத்தார்.
இதுக்குறித்து பேசிய கங்குலி " எம்.எஸ்.டி ஒரு நல்ல பேட்ஸ்மேன், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், இந்த ஆண்டு உலகக் கோப்பை 2019 இல் அவர் நிச்சயமாக நிரூபிப்பார். இது ஒரு போட்டி மட்டுமே" என்றார்
அடுத்து என்ன?
இந்தியா அணி வெஸ்ட் இண்டீஸை வியாழக்கிழமை மான்செஸ்டரில் ஒரு முக்கியமான போட்டியில் எதிர்கொள்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது ஒரு நல்ல நிலையில் உள்ளனர், மேலும் தகுதி பெற வெஸ்ட் இண்டீஸ் அணியின் அடுத்த நான்கு ஆட்டங்களில் இரண்டில் வெல்ல வேண்டும். தோனி அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர், அவர் நிச்சயமாக வரவிருக்கும் ஆட்டங்களில், குறிப்பாக நாக் அவுட்களில் ஒரு ஒருங்கிணைந்த பங்கை வகிப்பார். அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக செய்ததை விட விரைவாக தனது ரன்களை அடிப்பார்.