அம்பதி ராயுடுவை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக கோப்பை அணிக்கு விஜய் ஷங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார், தேர்வாளர்கள் தமிழ்நாடு வீரர் விஜயின் "முப்பரிமாணத் திறன்களுக்காக" அவருக்கு வாய்ப்பு வழங்கியதாக கூறியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி செவ்வாய்க்கிழமை அன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஆல் ரவுண்டர்களின் பங்கு பெரிதாக இருக்கும். இதனால் உலக கோப்பை அணியில் விஜய் ஷங்கரின் தேர்விற்கு நான் முழு ஆதரவு வழங்குகிறேன்" என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "விஜய் ஷங்கர் இங்கிலாந்தில் நன்றாகச் செயல்படுவார். அவர் ஒரு சிறந்த இளம் கிரிக்கெட் வீரர் ஆவார். அவரது பந்துவீச்சு முறை முன்னாள் இங்கிலாந்து வீரர் பால் காலிங்வுட் போன்று உள்ளது. அவரை பற்றி எந்த எதிர்மறையான விஷயமும் இல்லை. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் சிறப்பாக விளையாடியதால் அவருக்கு ஒரு இடம் கிடைத்தது" என்றார், டெல்லி ஐபிஎல் அணியின் ஆலோசகர் கங்குலி.
இந்தியா மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு ஸ்பின்னருடன் இரண்டு ஆல் ரவுண்டர்களும் ஆடும் லெவனில் இருந்தால் எதிரணியை எளிதில் கட்டுப் படுத்தலாம். ஆல் ரவுண்டர்களில் பாண்டியா முதல் தேர்வாகும். இரண்டாவது தேர்வாக (ரவீந்திர) ஜடேஜா அல்லது ஷங்கர் இடம் பெறலாம்.
இந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் போட்டிகள் அனைத்தும் கடின தன்மையுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன், ஏனெனில் அனைத்து அணிகளும் லீக் போட்டிகளில் ஒருவரையொருவர் எதிர்த்து விளையாடுகின்றனர்.
இதேப் போன்று கடைசியாக 1992 இல் முயற்சி செய்தார்கள். கடந்த காலத்தில் ஒன்று அல்லது இரண்டு அணிகள் பலவீனமானவையாக இருந்தன என்று நாம் உணர்ந்தோம், தற்போது அப்படி அல்ல. மேற்கிந்தியத் தீவுகள் வலுவாக உள்ளது, ஆஸ்திரேலியா எங்கேயிருந்தாலும் வலுவான அணி, நியூசிலாந்தும் வலுவாக உள்ளது, இந்திய அணியும் வலுவாக உள்ளது. இங்கிலாந்தில் பாக்கிஸ்தான் மிகவும் நன்றாக விளையாடியுள்ளது என்று அவர் கூறினார்.
ரிஷப் பண்ட் தேர்வு செய்யாதது பற்றி அவர் கூறுகையில், "தூர்திஷ்டவசமானது தான். இருந்தாலும் அணுபவ வீரர் என்ற முறையில் தினேஷ் கார்த்திக் தேர்வும் சரியான ஒன்றே. 21 வயதாகும் பண்ட்க்கு இன்னும் நிறைய காலங்கள் உள்ளது. அடுத்த உலககோப்பைகளில் அவர் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுப்பார்.
குல்தீப் யாதவ் தற்போது ஐபிஎல் போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளிக்காவிட்டாலும் உலக கோப்பை கிரிக்கெட்டில் முக்கிய பங்கு வகிப்பார் என கங்குலி கூறியுள்ளார். ஈடன் கார்டன் ஆடுகளம் தற்போது சுழற் பந்துவீச்சுகளுக்கு உகந்ததாக இல்லை.
ஈடென் கார்டன் ஆடுகளத்தில், யாருமே நன்றாக பந்து வீசவில்லை. குல்தீப் ஒரு திறமை வாய்ந்தவர், சில நேரங்களில் பந்து வீச்சாளர்களை டி 20 கிரிக்கெட்டின் அடிப்படையில் தேர்வு செய்வது சிறந்ததாக இருக்காது, குறிப்பாக ஸ்பின்னர்கள். குல்தீப் மீண்டும வருவார் என நம்புகிறேன் என முன்னாள் இந்திய கேப்டன் கூறினார்.
டெல்லி அணி ப்ளே ஆப் க்கு முன்னேறியதற்க்கு அணியின் கூட்டு முயற்சியே காரணம். அணியின் வெற்றிக்கு உதவிய ஷிகர் தவான், ககிசோ ரபாடா, ரிஷாப் பந்த், இளம் கேப்டன் ஷிரியாஸ் அய்யர் ஆகியோரை கங்குலி பாராட்டினார்.