சமீபகாலமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்திய அணியில் ஒரு சிறிய குறை சில ஆண்டுகளாக இருந்து கொண்டே இருக்கிறது. அந்த குறை என்ன என்றால் நான்காவது பேட்டிங் வரிசையில் யார் விளையாடுவது என்று தான். ஆனால் தற்போது நமது இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி அந்த குறையை தீர்த்துள்ளார். உலகக் கோப்பையில் இந்திய அணியில் தோனி இருக்கும் இடத்திற்கு ரிஷப் பண்ட் வரமுடியாது என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார் அவர் கூறியதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
இந்த வருடம் மே மாதத்தில் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட உள்ள இந்த உலகக் கோப்பை தொடர்பாக அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி கடந்த 2018-ம் வருடத்தில் விளையாடிய எந்த போட்டியிலும் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. எனவே தோனி பலரது விமர்சனங்களுக்கு உள்ளானார். தோனி அணியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்றால் முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலும் சென்று விளையாடி பயிற்சி எடுக்க வேண்டும் என்று கவாஸ்கர் அறிவுரை கூறினார் குறிப்பிடத்தக்கது.
இந்த 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. பலரது விமர்சனங்களையும் தாண்டி இந்த ஒருநாள் தொடரில் தோனி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். அந்த தொடரில் தோனி 3 ஒருநாள் போட்டிகளிலும் அரை சதம் விளாசி புதிய சாதனையை படைத்தார். மேலும் அந்தத் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த தொடரில் தொடர் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இவ்வாறு பலரது விமர்சனங்களுக்கு தனது பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்தார் தோனி. அது மட்டுமின்றி இந்திய அணியில் நான்காவது பேட்டிங் வரிசையில் யார் இறங்குவது என்ற குறையையும் தீர்த்து வைத்துள்ளார். இவ்வாறு இந்த ஆண்டை சிறப்பாக தொடங்கிய தோனியை பற்றியும் மற்றும் ரிஷப் பண்ட் பற்றியும் கௌதம் கம்பீர் கூறியது என்ன என்றால், தோனி சிறப்பாக விளையாடி வருகிறார். ரிஷப் பண்டும் நன்றாகத்தான் விளையாடுகிறார். அவர் சிறப்பாக விளையாடினாலும் உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற வாய்ப்பு இல்லை. இந்திய அணியில் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் மிகச்சிறப்பாக விளையாடுகின்றனர். எனவே அவர்களது இடத்திற்கு வர முடியாது. அவர் சிறிது காலம் காத்திருக்க தான் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியது என்ன என்றால் இந்திய அணியின் ஆட்டக்காரரான தவான் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. எனவே அவரும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பயிற்சி எடுத்துகொள்ள வேண்டும். அப்போதுதான் உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட முடியும். உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணியில் விளையாடும் அனைத்து வீரர்களும் நல்ல பார்மில் இருப்பது மிக அவசியம் என்றும் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.