கெளதம் கம்பீர்: அதிகம் பாராட்டப்படாத துரதிருஷ்டவசமான இந்திய கிரிக்கெட் வீரர்?

கம்பீர்
கம்பீர்

ஏப்ரல் 2, 2011, இரவு 8 மணி. உலகம் முழுவதும் இந்திய கிரிக்கெட் அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தேசத்தின் மகிழ்ச்சியான குறியீட்டை நிர்ணயிக்கும் சக்தியாக அந்த நாள் இருந்தது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது. மேலும், அந்த வாய்ப்பு தங்களது சொந்த மண்ணில் கிடைத்தது. அதுவரை எந்த அணியும் உலகக்கோப்பையை சொந்த மண்ணில் வென்றதில்லை.

ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களின் இதயங்கள் இந்தப் போட்டியை நோக்கி இருந்தன. இந்தியாவின் ஸ்கோர் 31/2 ஆன பின்பு, அந்த இதயங்கள் உடைந்து போயிருந்தது! ஆனால் கட்டுப்பாடற்ற மற்றும் அதிகமான அழுத்தம் நிறைந்த அந்தச் சூழ்நிலைக்கு மத்தியில், ஒருவர் படகை, நதியின் பாதுகாப்பான பகுதிக்குக் கொண்டு செல்வதுபோல, இந்திய அணியை மீட்டார். அவர் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். அவர் டெல்லியிலிருந்து வந்த கௌதம் கம்பீர் என்ற கம்பீரம் நிறைந்த வீரர்தான்.

அவரது அர்ப்பணிப்புடன் கூடிய அந்த 97 ரன்கள், அந்தத் தொடரில் இந்தியாவுக்கு மிக முக்கியமான ரன்கள். இந்தப் பத்து வருடங்களில் சிறந்த ஒருநாள் ஆட்டம் எனலாம். ஆனால் இந்த ஆட்டம், தோனியின் அதிரடியான 91* ரன்களால் பெரிய அளவில் பாராட்டப்படவில்லை.

யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, கம்பீரின் சிறந்த இணையான விரேந்தர் சேவாக் ஆகியோர் அளவுக்கு அதிகம் பிரபலம் கம்பீருக்கு இல்லை. ஆனால், அணிக்கு எப்போது முக்கிய தேவையோ, அன்று தனது பங்களிப்பைத் தந்தார் கம்பீர். இந்திய வரலாற்றில் சிறந்த 2 ஆட்டங்களை கம்பீர் ஆடியுள்ளார்.

2007-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் தேதி அவருடைய ஆட்டம் சிறப்பான ஒன்று. அவரது 75 ரன்கள், பாகிஸ்தானுக்கு எதிராக நல்ல இலக்கை நிர்ணயிக்க உதவியது. அந்தக் காலகட்டத்தில் மிகச்சிறந்த ஒரு ஆட்டமாக இருந்தது. ஆனால், அன்று இர்பான் பதானின் சிறப்பான பவுலிங்குடன் கூடிய ஆட்டம் இவரது ஆட்டத்தை மறைத்தது.

இந்தியாவின் பேட்ஸ்மேன்களில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராகச் சிறப்பாக விளையாடுபவர் கம்பீர். அவர் நிறைய சிறந்த டெஸ்ட் இன்னிங்க்ஸ்களை விளையாடியுள்ளார். நேப்பியரில் அவர் 436 பந்துகளில் 137 ரன்கள் எடுத்த ஆட்டம் இந்தியா சார்பில் வெளிநாட்டில் ஆடப்பட்ட சிறந்த ஆட்டமாகும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 2014-ஆம் ஆண்டில் தனது 2-வது ஐபிஎல் பட்டத்தை வென்றார். இந்திய அணிக்கு ஒரு கேப்டனாகச் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை அதன்மூலம் நிரூபித்தார். ஐபிஎல் போட்டிகளில் 4000+ ரன்களை அவர் எடுத்துள்ளார். அவர் எப்பொழுதும் கேப்டனாக எதிர்மறையான எண்ணங்களை வெளிப்படுத்தியதில்லை. நேர்த்தியான ஒரு செயல்பாடுகளையும், ஆற்றலையும் கொண்டிருந்தார்.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலான கிரிக்கெட் வாழ்க்கையில், கௌதம் 58 டெஸ்ட் போட்டிகளையும் 147 ஒரு நாள் போட்டிகளையும் விளையாடியுள்ளார். மேலும் 4000+ (டெஸ்ட் ரன்கள்) மற்றும் 5000+ (ஒருநாள் போட்டி ரன்கள்) எடுத்து நல்ல சராசரி வைத்துள்ளார். 2007 முதல் 2011 வரை அவரைப் போல யாரும் சிறப்பாக ஆடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி நம்பர் 1 இடத்தைப் பிடித்ததில், அவரின் பங்களிப்பு அதிகம்.

மற்ற விளையாட்டு வீரர்களைப் போலவே, கம்பீரும் கிரிக்கெட் வாழ்வில் ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளார். 2007 முதல் 2012 வரை கிரிக்கெட் பார்த்த ரசிகர்களின் இதயத்தில் கம்பீர் அவர்களுக்கு எப்பவும் சிறப்பான இடம் உண்டு.

சிலருக்கு, அவர் சிறுவயது நாயகனாக இருக்கலாம். சில சமயங்களில் அவர் அதிகம் பாராட்டப்படாத ஹீரோவாக இருக்கலாம். ஆனால், கம்பீரின் சாதனைகள், மற்ற வீரர்களின் சாதனைகளுக்கு முன்பு மறைக்கப்பட்டுவிட்டது. அவர் ஒரு பெரிய போராளி. அதிக போராட்ட குணமுடையவர். அவரது தொண்டு வேலைகள்( நல உதவிகள் ) நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவர் அதைத் தொடர்ந்து செய்வார் என எதிர்பார்க்கலாம்.

கம்பீர் கடினமான விளையாட்டை விளையாடியுள்ளார். ஆனால் நேர்மையானவராக இருந்தார். அவர் சிறிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளார். அவர் அளித்த பங்களிப்பு அளவுக்கு நாம் அவரைப் பாராட்டவில்லை. அவரைக் கொண்டாட இதுவே சரியான நேரம்.

Quick Links

App download animated image Get the free App now