மாவட்ட அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் ஒரு ரன் கூட அடிக்காமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெண்கள் U19 அணி

 scorecard
scorecard

நடந்தது என்ன?

மே 15 அன்று கேராளாவின் மலப்புரம் நகரில் உள்ள பெரிதால்மன்னா கிரிக்கெட் மைதானத்தில் கசராகாட் U19 பெண்கள் அணியும், வயநாட் U19 பெண்கள் அணியும் மோதிய போட்டியில் முதலில் பேட் செய்த கசராகாட் பெண்கள் U19 அணி 4 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெளியேறியது. இதன்மூலம் கசராகாட் அணி கிரிக்கெட் வரலாற்றில் மிக மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு தெரியுமா...

மாவட்ட அணிகளுக்கு இடையிலான பெண்கள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று கசராகாட் பெண்கள் U19 அணி பேட்டிங் தேர்வு செய்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆல்-அவுட் ஆனது. அந்த போட்டியில் அந்த அணியின் ஸ்கோர் 4-10.

கதைக்கரு

வடக்கு மண்டல மாவட்ட அணிகளுக்கு இடையிலான 30 ஓவர்கள் பெண்கள் கிரிக்கெட்டில் கசராகாட் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பேட்டிங் செய்ய வந்த அனைத்து பெண் கிரிக்கெட் வீராங்கனைகளும் ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினர். டாஸ் வென்ற கசராகாட் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியின் வீராங்கனைகள் ஒன்பது-முள் விளையாட்டை போல அனைவரும் மளமளவென தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். குறிப்பாக அனைத்து பேட்டிங் வீராங்கனைகளும் ஒரே மாதிரியாக ஸ்டம்பை பறிகொடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

எதிரணி வீராங்கனை VJ ஜோஸித்தா இப்போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். வயநாட் கேப்டன் நித்யா லூர்த், தான் வீசிய முதல் ஓவரிலேயே எதிரணியின் இரு தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்திய VJ ஜோஸித்தா 5 பந்துகளை வீசி 1 ரன் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கசராகாட் அணிக்கு வந்த அந்த 4 ரன்களும் எதிரணி வீசிய சில அகலப்பந்தின் மூலமே வந்தது. இல்லையெனில் ஒரு ரன் கூட எடுக்காமலேயே வெளியேறியிருக்கும். வயநாட் இந்த ரன் இலக்கை அடைய விக்கெட் ஏதும் விடாமல் 1 ஓவர் மட்டுமே எடுத்து கொண்டது.

கசராகாட் மாவட்ட கிரிக்கெட் அணியின் தலைவர் நோஃபல் பிஎச், டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற பத்திரிக்கைக்கு கூறியதாவது:

" இந்த போட்டியில் எங்கள் அணியின் ஆட்டம் மிகவும் அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளது. எங்களுக்கு பெண் பயிற்சியாளர் என யாரும் இல்லை. இதனால் மண்டல அணிகளில் விளையாடி வரும் மூத்த வீராங்கனைகளை வைத்தே நாங்கள் பயிற்சியளித்து வருகிறோம். தற்போது எங்களுடைய U-19 அணியில் உள்ள சில வீராங்கனைகள் கடந்த வருடத்தில் நடத்த மண்டல தொடரில் விளையாடினர். மாவட்ட கிரிக்கெட் அணிகளில் வயநாட் மிகவும் வலிமை வாய்ந்ததாக திகழ்கிறது. கசராகாட் அணி இவ்வளவு மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அடுத்தது என்ன?

கசராகாட் பெண்கள் U19 அணி தங்களது மோசமான ஆட்டத்தின் மூலம் தகுந்த பாடம் கற்றிருக்கும். எனவே வருங்கால போட்டிகளில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த முயற்சிக்கும். பெண் பயிற்சியாளர் இல்லாமல் விளையாடும் அந்த அணி புதிய பெண் பயிற்சியாளரை நியமித்து தனது ஆட்டத்திறனை மெருகேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

App download animated image Get the free App now