ஐபிஎல் தொடரில் கிளென் மேக்ஸ்வெல்–ன் மறக்க முடியாத 3 இன்னிங்ஸ்கள்!!

Glenn Maxwell
Glenn Maxwell

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் உள்ள முன்னணி அதிரடி ஆட்டக்காரர்கள் விளையாடும் ஒரு தொடர் தான் ஐபிஎல் தொடர். இந்த ஐபிஎல் தொடரில் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்த ஐபிஎல் தொடர் ஆனது, தொடர்ந்து 11 வருடமாக இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் முன்னணி அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவர், ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த கிளென் மேக்ஸ்வெல். இவரது சிறப்பான 3 இன்னிங்ஸ்களை பற்றி இங்கு விரிவாக காண்போம்.

#3) பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி

மேக்ஸ்வெல் – 68 ( 42 )

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. சிறப்பாக விளையாடிய கௌதம் கம்பீர் 54 ரன்களை விளாசினார். தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடிய ராபின் உத்தப்பா 70 ரன்கள் குவித்தார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 164 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை சேஸ் செய்யும் பொழுது பஞ்சாப் அணியின் முன்னணி வீரர்கள் தொடக்கத்திலேயே தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

3 விக்கெட்டுகளை பஞ்சாப் அணி இழந்த நிலையில், மேக்ஸ்வெல் பேட்டிங் செய்ய வந்தார். வந்தவுடன் வழக்கம்போல் தனது அதிரடி ஆரம்பித்தார். அதிரடியாக 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களை விளாசினார். போட்டி முடியும் வரை போராடிய மேக்ஸ்வெல், இறுதியில் 68 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். எனவே பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.

#2) பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி

மேக்ஸ்வெல் – 95 ( 43 )

Glenn Maxwell
Glenn Maxwell

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதினர். இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடிய டுவைன் ஸ்மித் மற்றும் பிரண்டன் மெக்கலம் ஆகிய இருவரும் அரை சதம் விளாசினர். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 205 ரன்கள் குவித்தது.

இந்த கடினமான இலக்கை பஞ்சாப் அணி சேஸ் செய்யும் பொழுது, தொடக்கத்திலேயே சேவாக் மற்றும் புஜாரா ஆகிய இருவரும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதன் பின்பு மேக்ஸ்வெல் மற்றும் மில்லர் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி வெற்றியை தங்கள் வசம் இழுத்தனர். 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களை விளாசிய மேக்ஸ்வெல், 43 பந்துகளில் 95 ரன்களை விளாசினார். இறுதியில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

#1) பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி

மேக்ஸ்வெல் – 95 ( 43 )

Glenn Maxwell
Glenn Maxwell

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் இந்த இரு அணிகளும் மோதினர். முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் ஏழாவது ஓவரில் மேக்ஸ்வெல் பேட்டிங் செய்ய வந்தார். இறுதிவரை அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 43 பந்துகளில் 95 ரன்களை விளாசினார். இதில் 9 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Fambeat Tamil