இந்திய அரசு ஆண்டு தோறும் விளையாட்டு துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பத்மஶ்ரீ விருது வழங்கி வருகிறது. இந்த விருது ஆண்டு தோறும் குடியரசு தின விழா அன்று குடியரசு தலைவரால் வழங்கப்படுகிறது. இவ்வாறு இந்த வருடத்திற்கான பத்மஶ்ரீ விருது பெரும் வீரர்களின் பெயரை வெளியிட்டது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் காம்பீர் இடம்பெற்றிருந்தார். அதுகுறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
இந்திய அரசு பாரத ரத்னா, பத்மஶ்ரீ, பத்ம விபூஸன் மற்றும் அர்ஜுனா போற்ற விருதுகளை வழங்கி ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்படுபவர்களை ஊக்குவிக்கிறது. அர்ஜுனா விருது விளையாட்டு துறைக்கே உரிய விருது. இதில் விளையாட்டு துறையில் சிறப்பாக செயல்படும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்திய கேப்டன் விராத் கோலி, தோனி ,கம்பீர் போன்ற பல கிரிக்கெட் வீரர்கள் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.
இதற்கு முன் பத்மஶ்ரீ விருது பெற்ற வீரர்கள்:
பத்மஶ்ரீ விருது என்பது இந்தியாவில் மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. இந்த விருதினை இதற்கு முன் அசாருதின், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, ஹர்பஜன் சிங், அனில் கும்பிளே, சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லட்சுமணன், மிதாலி ராஜ போன்ற வீரர்கள் பெற்றுள்ளனர். இதற்கு பின் இந்த விருதினைப் பெறும் வீரர் கவுதம் கம்பீர் ஆவர். கவுதம் காம்பீர் ஏற்கனவே அர்ஜுனா விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வருட பத்மஶ்ரீ விருதி பெறுபவர்கள்:
பத்ஶ்ரீ விருது 8 விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் அந்த விருதினைப் பெறும் வீரர்கள் கவுதம் காம்பீர் ( கிரிக்கெட் ), சுனில் ( கால்பந்து ), ஹரிகா ட்ரோனவள்ளி ( செஸ் ), சரத் கமல் ( டேபிள் டென்னிஸ் ), பம்பய்லா தேவி லைஸ்ராம் ( வில் வித்தை ), பஜ்ராங் புனியா ( மல்யுத்தம் ), பிரசாந்தி சிங் ( கூடைப்பந்து ) மற்றும் அஜய் தகூர் ( கபடி ) ஆகிய 8 வீரர்கள் இந்த விருதினைப் பெறுகின்றனர்.
கவுதம் கம்பீர்-ன் சாதனைகள்
கவுதம் காம்பீர் ஏற்கனவே அர்ஜுனா விருதை பெற்றவர் ஆவார். இவருக்கு இந்திய அரசு பத்மஶ்ரீ விருது வழங்க காரணம் என்னவென்றால் பலவற்றை கூறலாம். அதில் சிலவற்றை பார்ப்போம். உலக கோப்பை போட்டிகளின் நாயகன் என்றாலே நம் அனைவருக்கும் நியாபகம் வரும் ஒரே வீரர் கவுதம் காம்பீர். 2007 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் அனைத்து வீரர்களும் ரன் எடுக்க தடுமாறிய நிலையில் ஒற்றை ஆளாக 75 ரன்கள் குவித்து அணியை கரை சேர்த்தவர்.
உலக கோப்பை இறுதிப்போட்டியில் சேவாக் மற்றும் சச்சின் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தனி ஆளாக நின்று 97 ரன்களை குவித்து இந்திய அணிக்கு கோப்பையை வென்றுத் தந்தார்.
அதுமட்டுமல்லாமல் மிகக்குறைவான இன்னிங்ஸ்லேயே டி20 தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்த வீரர் இவரே. இவர் அதற்கு வெறும் 7 இன்னிங்ஸ்கலே எடுத்துக் கொண்டார். இன்றளவும் இந்த சாதனையை எந்தவொரு வீரராலும் உடைக்க முடியவில்லை.
இது போன்ற பல சாதனைகளை படைத்த சாதனை நாயகனாக கம்பீருக்கு இந்த அரசு பத்மஶ்ரீ விருது அறிவித்துள்ளது வரவேற்க்கத்தக்கது.