கரீபியன் பிரிமியர் லீக்கில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள லசித் மலிங்கா மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ்

Courtesy: WIC/Twitter
Courtesy: WIC/Twitter

இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் இலங்கையின் லசித் மலிங்கா மற்றும் ஸ்ரூ உடானா ஆகிய இருவரும் கரீபியன் பிரிமியர் லீக்கின் வரைவு ஏலத்தில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் முதல் சுற்றில் 1,60,000 அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இது இந்திய மதிப்பில் ஒரு கோடியே 11 லட்சத்து பத்தொன்பதாயிரத்து நூற்று நான்கு ஆகும். அலெக்ஸ் ஹேல்ஸ் பார்படாஸ் டிரைடென்ட்ஸ் அணியிலும், மலிங்கா ஸ்டே லூசியா ஸ்டார் அணியிலும், ஸ்ரூ உடானா ஸ்டே கிட்ஸ் & நிவிஸ் பேட்ரியோட்ஸ் அணியிலும் விளையாட உள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகளின் நட்சத்திர வீரர்களை பற்றி பார்க்கும்போது ஆன்ரிவ் ரஸல் ஜமைக்கா தலவாய்ஸ் மற்றும் டுவைன் பிராவோ டிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணியினாலும் தக்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் டிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணி சுனில் நரைன், காலின் முன்ரோ, தினேஷ் ரம்டின், கேரே பிராரே ஆகியோரையும் தக்க வைத்துள்ளது.

2017ல் நடந்த கரீபியன் பிரிமியர் லீக்கில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி டிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்த பாகிஸ்தான் நட்சத்திர வீரர் ஷதாப் கான் தற்போது கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷீத் கான் இரோ டி20 ஸ்லாம் தொடரில் விளையாட உள்ளதால் சிபிஎல் தொடரிலிருந்து விலிகியுள்ளார். அவருக்கு பதிலாகவே அந்த அணியில் ஷதாப் கான் இடம்பெற்றுள்ளார். ரஷீத் கான்-உடன் கிறிஸ் லின் மற்றும் பிரென்டன் மெக்கல்லம் போன்ற நட்சத்திர வீரர்களும் இரோ டி20 ஸ்லாம் தொடரில் விளையாட முடிவு செய்துள்ளனர். இரோ டி20 ஸ்லாம் மற்றும் கரீபியன் பிரிமியர் லீக் இரண்டும் ஆகஸ்ட் 30 தொடங்க உள்ளது.

கடந்த வருடத்தில் ஸ்டே லூசியா ஸ்டார்ஸ் அணியில் விளையாடிய ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்ட் டிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணியில் விளையாட இவ்வருடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஸ்டே லூசியா ஸ்டார்ஸ் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஃபவாட் அகமது-வை தன் வசம் இழுத்துள்ளது. கடந்த சிபிஎல் தொடரில் டிரிபாங்கோ நைட் ரெய்டர்ஸ் அணிக்காக விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஃபவாட் அகமது. இலங்கை விக்கெட் கீப்பர் நிரோஷா திக்வெல்லா-வும் ஸ்டே லூசியா ஸ்டார்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.

கடந்த வருடத்தில் பார்படாஸ் டிரைடேன்ட்ஸ் அணிக்காக விளையாடிய அதிகம் மதிப்பிடப்பட்ட நிக்கலஸ் பூரான் இவ்வருட சிபிஎல் தொடரில் கயான அமேசான் வாரியர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த அணி ஷேர்ஃபேன் ரூதர்போர்ட் மற்றும் கீமோ பால் ஆகியோரையும் தக்க வைத்துள்ளது. கடந்த சிபிஎல் தொடரில் ஸ்டே கிட்ஸ் & நிவிஸ் பேட்ரியோட்ஸ் அணியினை வழிநடத்திய கிறிஸ் கெய்ல் மீண்டும் ஜமைக்கா தலவாய்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். ஜேஸன் ஹோல்டர் பார்படாஸ் டிரைடேன்ட்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நேபாளைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லாமிச்சனே பார்படாஸ் டிரைடென்ட்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டோமினிக் டேக்கர் புதிதாக டிரைடென்ட்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். வஹாப் ரியாஜ் டிரைடென்ட்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளார். 2015 முதல் 2018 வரை சிபிஎல் தொடரில் விளையாடிய அமெரிக்க பேட்ஸ்மேன் ஸ்டிவ் டெய்லர் நீக்கப்பட்டுள்ளார். கனடா-வைச் சேர்ந்த நிதிஷ் குமார் மட்டுமே வட அமெரிக்காவிலிருந்து சிபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ளார். இவர் ஸ்டே லூசியா ஸ்டார்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

App download animated image Get the free App now