நடந்தது என்ன?
ஷேன் வாட்சன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4வது ஐபிஎல் கோப்பையை வெல்லும் நோக்கில் விளையாடி கொண்டிருந்தார். ஆனால் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்த நாள் (மே 13) ஹர்பஜன் சிங் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில் ஷேன் வாட்சன் இறுதிப் போட்டியில் காயத்துடன் விளையாடினார் என அவரது புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.
உங்களுக்கு தெரியுமா...
ஐபிஎல் வரலாற்றில் 10 தொடரில் பங்கேற்று 8 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை 2019 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் எதிர் கொண்டது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்று தனது 4வது ஐபிஎல் கோப்பையை தட்டிச் சென்றது. இந்த போட்டி நடைபெறாத வரை இரு அணிகளும் தலா 3 முறை கோப்பைகளை வென்றிருந்தது. இந்த இரு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 4 முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளனர். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 1 முறை மட்டுமே வென்றுள்ளது.
கதைக்கரு
சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலக்கிற்கு மிக் அருகில் சென்றது. ஆனால் ஆட்டத்தின் இறுதி பந்தை லாசித் மலிங்கா குறைவான வேகத்தில் வீசி மும்பை இந்தியன்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார். முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 150 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினர்.
அந்த அணியில் ஷேன் வாட்சன் மட்டுமே 30+ ரன்களை விளாசினார். இவர் 59 பந்துகளை எதிர்கொண்டு 80 ரன்களை எடுத்து சென்னை அணியை இலக்கிற்கு மிக அருகில் அழைத்து சென்றார். ஆனால் இறுதி கட்டத்தில் ஷேன் வாட்சன் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால் ஆட்டம் மும்பை அணிக்கு சாதகமாக மாறியது.
இந்தப் போட்டிக்கு அடுத்த நாள் ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேன் வாட்சன் ஐபிஎல் இறுதிப் போட்டியில் முழங்காலில் ரத்தக் கசிவுடன் விளையாடினார் என ஒரு புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார். ஹர்பஜன் சிங் இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியதாவது: "மக்களே காலில் ரத்தம் வருவதை பார்க்கிறீர்களா... ஆட்டம் முடிந்த பிறகு 6 தையல்கள் இவருக்கு போடப்பட்டுள்ளது. ரன் எடுத்து கொண்டிருக்கும் போது கீரஸை ரீச் செய்ய ஓடிய போது தாவீயதால் காயம் ஏற்பட்டது. ஆனால் இதனை ஷேன் வாட்சன் யாரிடமும் தெரிவிக்காமல் தொடர்ந்து விளையாட ஆரம்பித்தார். இதுதான் நம்ம ஷேன் வாட்சன். கிட்டத்தட்ட மேட்ச் வின்னர் ஷேன் வாட்சனே.
அடுத்தது என்ன?
உலகின் நம்பர் 1 ஆல்-ரவுண்டராக வலம் வந்த ஷேன் வாட்சன் 2016ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இதன் பின் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 லீக்கில் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி வந்தார். வேலைப்பளுவை குறைக்கும் விதமாக ஷேன் வாட்சன் கடந்த மாதத்தில் பிக்பேஸ் டி20 தொடரிலிருந்து தனது ஓய்வினை அறிவித்தார்.
2019 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஷேன் வாட்சனின் சிறப்பான ஆட்டத்தால், அடுத்த சீசனிலும் வாட்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்படுவார் என கிரிக்கெட் ரசிகர்கள் நம்புகின்றனர்.