ஹர்பஜன் சிங்கின் ஆல்-டைம் உலக XI

Harbhajan Singh
Harbhajan Singh

நடந்தது என்ன?

இந்திய அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் லார்ட்ஸ்-ஹோம் ஆப் கிரிக்கெட் வெளியிட்ட ஒரு காணொலியில் தனது ஆல்-டைம் உலக XIஐ தேர்வு செய்துள்ளார். ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ள இந்த அணியில் 1990க்கு முந்தைய ஆண்டுகளில் விளையாடிய வீரர்களும் தற்போதைய தலைமுறையில் சிறந்து விளங்கும் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

உங்களுக்கு தெரியுமா...

லார்ட்ஸ்-ஹோம் ஆஃப் கிரிக்கெட்டின் அதிகாரபூர்வ வலைதளத்தில் கடந்த காலங்களில் நடந்த கிரிக்கெட் தொடர்களில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்திய வீரர்களை கொண்டு 11 பேர் கொண்ட அணி ஒன்றை தேர்வு செய்து வெளியிட்டிருந்தது. அதில் இடம்பெற்றிருந்த 38 வயதான ஹர்பஜன் சிங் தனது ஆல்-டைம் உலக XIஐ தேர்வு செய்துள்ளார்.

கதைக்கரு

103 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் 28 சர்வதேச டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடியுள்ள ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ள தனது உலக XIல் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக இந்திய வீரர்களை தேர்வு செய்துள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 400க்கும் மேல் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஹர்பஜன் சிங் தான் தேர்வு செய்துள்ள உலக XI அணியின் தொடக்க ஆட்டக்காரராக கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய அணியின் தற்போதைய துணைக் கேப்டன் ரோகித் சர்மா இடம்பெற்றுள்ளனர். விராட் கோலியை நம்பர் 3 பேட்ஸ்மேனாக தேர்வு செய்துள்ளார். அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக விராட் கோலியை தேர்வு செய்ய ஹர்பஜன் சிங் மறக்கவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக அனுபவ இரட்டை வீரர்கள் ரிக்கி பாண்டிங் மற்றும் ஜாக்கஸ் காலிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆல்-ரவுண்டர் ஆன்ரிவ் ஃபிலினட் ஆஃப் மற்றும் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி 6வது மற்றும் 7வது பேட்ஸ்மேன்களா தேர்வு செய்துள்ளார். இதனுடன் பேட்டிங் லைன்-அப் முடிந்தது. அத்துடன் மகேந்திர சிங் தோனியை தனது அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன் சிங்.

இவர் 4 சிறந்த பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து தனது ஆடும் XI-ஐ கட்டமைத்து உள்ளார். லெஜன்ட்ரி சுழற்பந்து வீச்சாளராக உலகில் வலம் வந்த ஷேன் வார்னே மற்றும் முத்தையா முரளிதரனை தேர்வு செய்துள்ளார். மேலும் ஹர்பஜன் சிங் தனது முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வாஸிம் அக்ரம் மற்றும் லாசித் மலிங்காவை தேர்வு செய்துள்ளார்.

ஹர்ஜன் சிங்கின் உலக XI

சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, விராட் கோலி, ரிக்கி பாண்டிங், ஜாக்கஸ் காலிஸ், ஆன்ரிவ் ஃபிளிட் ஆஃப், எம்.எஸ்.தோனி(கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஷேன் வார்னே, வாஸிம் அக்ரம், முத்தையா முரளிதரன், லாசித் மலிங்கா.

அடுத்தது என்ன?

ஹர்ஜன் சிங் தனது உலக XIல் துணைக் கண்ட வீரர்களுக்கு இடமளித்து உள்ளார். இவரது உலக XI மிகவும் அற்புதமான அணியாக தற்போதைய தலைமுறையில் திகழ்கிறது. இந்த அணி உலகின் எவ்வளவு வலிமையான அணியாக இருப்பினும் வீழ்த்தும். அத்துடன் ஹர்பஜன் தேர்வு செய்துள்ள அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் கடந்த காலங்களில் அவரவர் விளையாடிய அணிகளின் வெற்றிகளுக்கு முழு காரணமாக இருந்துள்ளனர்.

Quick Links

App download animated image Get the free App now