இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஸ்போர்ட்ஸ் கீடாக்கிர்க்கு பேட்டியளிக்கும் பொழுது, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவர்களில் யார் சிறந்த வீரர்?? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஹர்பஜன் சிங் கூறிய பதிலை பற்றி இங்கு காண்போம்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்கு சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்பவர் விராட் கோலி. விராட் கோலிக்கு முன்பாக தோனிதான் இந்திய அணியை வழி நடத்தினார். தற்போது கடந்த ஒரு வருடமாக இந்திய அணிக்கு விராட் கோலிதான் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். சேசிங் என்றாலே இந்திய அணி தான் வெற்றி பெறும் என்ற ஒரு நிலையை உருவாக்கி அதற்கு முக்கிய காரணம் விராட் கோலி தான்.
விராட்கோலி இதுவரை அடித்த சதங்களில், அதிக சதங்களை இந்திய அணி சேஸ் செய்யும் பொழுதுதான் அடித்துள்ளார். சமீப காலமாக நம்பர்-1 பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். குறிப்பாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை முறியடித்து கொண்டே வருகிறார். வருகின்ற மே மாதம் நடைபெற உள்ள உலக கோப்பை தொடரில், இந்திய அணி முதல் முறையாக விராட் கோலி தலைமையில் உலககோப்பை விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சர்மாவும் இவருக்கு நிகரான ஒரு திறமையான வீரர் தான். விராட் கோலி ஒருநாள் போட்டி, டி-20 போட்டி, மற்றும் டெஸ்ட் போட்டி ஆகிய மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகிறார். ஆனால் ரோகித் சர்மா ஒருநாள் போட்டி, மற்றும் டி-20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். ஆனால் இந்த இருவித கிரிக்கெட் போட்டிகளிலுமே ரோகித் சர்மா சாதனை நாயகனாக திகழ்ந்து வருகிறார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3 முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் இவர்தான். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் ரோகித் சர்மா. அது மட்டுமின்றி இந்திய அணிக்கு துணை கேப்டனாகவும், விராட் கோலி இல்லாத சமயங்களில் பகுதிநேர கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார் ரோகித் சர்மா.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவர்களில் யார் சிறந்த வீரர்?? என்று ஹர்பஜன் சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு அவர் கூறிய பதில் என்னவென்றால், "இந்த கேள்விக்கு பதில் அளிப்பது மிகவும் கடினம் தான். இவர்கள் இருவருமே மிகச் சிறந்த வீரர்கள் தான். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி சாதனை படைத்தால், ரோகித் சர்மா ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் சாதனை படைத்து வருகிறார். விராட் கோலி யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சதங்களை குவித்து வருகிறார். அதே சமயத்தில் ரோகித் சர்மா களத்தில் நிலைத்து விட்டால், பெரிய இன்னிங்ஸ் ஆடுவதில் ரோகித் சர்மா தான் சிறந்த வீரர். ரோகித் சர்மா திறமைசாலி. விராட் கோலி கடும் உழைப்பாளி. ஒருநாள் போட்டியின் ரேங்கிங் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்திலும் ரோகித் சர்மா இரண்டாவது இடத்திலும் இருந்தாலும்,திறமை அடிப்படையில் இவர்கள் இருவருமே ஒன்றுதான்". இவ்வாறு அவர் கூறினார்.