சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஐந்தாவது முறையாக ஹாட்ரிக் சிக்சர் அடித்தார் ஹர்திக் பாண்டியா...

hardik pandya hits three consecutive sixes
hardik pandya hits three consecutive sixes

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நியூசிலாந்து நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டியை வென்ற இந்திய அணி தொடரை முன்னதாகவே வென்று விட்டது. இந்திய கிரிக்கெட் வாரியம் விராட் கோலி அவர்களுக்கு கடைசி 2 ஒருநாள் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது. நான்காவது ஒருநாள் போட்டியில் படுமோசமாக ஆடிய இந்திய அணி தோல்வி அடைந்தது. இவரின் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. கடந்த ஒரு நாள் போட்டியை போன்றே இந்தப் போட்டியிலும் இந்திய அணி 4 விக்கெட்டுகளை மிக விரைவில் இருந்தது. தமிழக வீரர் சங்கர் மற்றும் ராயுடு இருந்து மீட்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயுடு 90 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பல சர்ச்சைகளைக் கடந்து மீண்டும் அணிக்கு திரும்பிய பாண்டியா களமிறங்கி நியூசிலாந்து வீரர் ஆஸ்டில் வீசிய பந்தை ஹாட்ரிக் சிக்சர் விளாசினார். சர்வதேச கிரிக்கெட்டில் ஐந்தாவது முறையாக இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பாண்டியா 5 சிக்சர்களுடன் 45 ரன்களை விளாசினார். இறுதியில் இந்திய அணி 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதற்கு முன்பு ஹர்திக் பாண்டியா அடித்த ஹாட்ரிக் சிக்சர்களை காண்போம்.

1. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வீசிய பந்தில் முதல்முறையாக தொடர்ந்து 3 சிக்சர்களை அடித்தார்.

2. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர் சதாப் கான் வீசிய பந்தில் தொடர்ந்து 3 சிக்சர்களை அடித்தார்.

3. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் தனது முதலாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அந்த இன்னிங்சில் இலங்கை பந்துவீச்சாளர் புஷ்பகுமார வீசிய பந்தில் தொடர்ந்து 3 சிக்சர்களை அடித்தார்.

4. 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சாம்பா வீசிய பந்தில் தொடர்ந்து 3 சிக்சர்களை அடித்தார்.

5. இன்று நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஹாட்ரிக் சிக்சர்களை விளாசினார் இந்திய அணி வீரர் பாண்டியா.

பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி வழக்கம்போல் அவர்களது ஓபனிங் பேட்ஸ்மேன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடாமல் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

உலக கோப்பை கருத்தில் கொண்டு விளையாடி வரும் இந்தியா அணி, வீரர்களின் திறமைகைளை சரியான முறையில் கவனித்து வருகிறது. இப்படி ஒரு சூழலில் தான் ஹர்டிக் பாண்டிய இவ்வாறு அதகளபடுத்தியுள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களை கண்டாலே பேட்டை சுழற்றும் ஹர்டிக் பாண்டிய உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படுவார் என்பதற்கு இதுவே ஆதாரம். மேலும் இதே ஆட்டத்தில் பந்துவீசிய பாண்டியா 2 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார்.

Quick Links

App download animated image Get the free App now