ஹர்திக் பாண்டியா 2.O 

Hardik Pandya
Hardik Pandya

ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் தனது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணியில் இடம்பெற்றார் ஹர்திக் பாண்டியா. சர்வதேச அளவிலான தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடினார். இவர் வீசிய முதல் ஓவரிலேயே மூன்று அகல (வைட்) பந்துகளை வீசினார். அந்த ஓவரின் முடிவில் 19 ரன்களை வழங்கியிருந்தார் ஹர்திக் பாண்டியா. பின்பு சரியாக வீசிய இவர் மீதமுள்ள ஓவர்களில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்த போட்டியில் பேட்டிங் செய்த இவர் 17 பந்துகளில் 27 ரன்களை குவித்து அசத்தினார்.

2017-ம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இவர் 2018 ஆம் ஆண்டு சற்று மோசமாகவே அமைந்தது. காயம் காரணமாக கடைசி மூன்று மாதங்களில் எந்தவித போட்டிகளிலும் இவரால் பங்கேற்க முடியவில்லை. 2019 ஆம் ஆண்டு இடைநீக்கம் செய்யப்பட்டார், இருப்பினும், நியூசிலாந்து அணிக்கு எதிராக பங்கேற்ற போட்டியில் 22 பந்துகளில் 45 ரன்களை குவித்து அசத்தினார்.

இதன் பின்பு, தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இதுவரை 355 ரன்களை சேர்த்துள்ளார். சராசரி 50.71 ஆகும், இவரது ஸ்ட்ரைக் ரேட் 198.32 ஆகும். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் கடைசிக் கட்டங்களில் அதிரடியாக ரன் சேர்ப்பது வழக்கம். சமீபத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இவர் விளாசிய 91 ரண்களின் மூலம் பெரும்பான்மையான வீரர்களைப் போல் அல்லாமல் இவர் எந்த ஒரு சூழ்நிலையிலும் நின்று ஆடக்கூடிய வீரர் என நிரூபித்தார்.

இவர் சூழ்நிலைக்கு ஏற்ப தனது ஆட்டத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை உடைய வீரர், இதற்கு சான்றாக அமைகின்றது இவரது சென்ற வருட ஆட்டம், மும்பை அணிக்காக 42 பந்துகளில் பொறுமையாக விளையாடி 50 ரன்களை குவித்தார். "நான் எனது ஆட்டத்தை மேம்படுத்த நினைத்தேன், எனது ஆட்டத்திற்கு எனது உடல் நன்கு ஒத்துழைக்கின்றது. எனது இடைநீக்கம் எனது ஆட்டத்தை மேம்படுத்தவும், சரியான மனநிலையில் இருக்கவும் உதவியது" என்று கூறினார் ஹர்திக் பாண்டியா.

Hardik Pandya
Hardik Pandya

அதிரடி ஆட்டத்திற்கான இவரது வித்தியாசமான அணுகுமுறை இவருக்கு நல்ல பலன்களை கொடுக்கின்றன எனலாம், இவரது உடலானது மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்களைப் போல் கட்டமைப்பு இல்லாவிடினும் இவரது பலம் வாய்ந்த முன்கைகளால் கடினமான பந்துளையும் எளிதாக சிக்ஸர்களுக்கு விளாசுகின்றார்.

இவரது வலது கால் ஆஃப் ஸ்டம்பிற்க்கு பக்கமாகவும் இடது கால் லெக் சைடு இருப்பதாலும் லெக் சைடில் பலம் வாய்ந்த வீரராக திகழ்கிறார். இதன் காரணமாகவே பியூஸ் சாவ்லா மற்றும் குர்நே ஆகிய வீரர்களின் பந்துகளை எளிதாக சிக்ஸர்களுக்கு விளாசினார்.

"ஏழு மாதங்களாக கிரிக்கெட் விளையாட வில்லை, நான் வெளியே இருந்தேன், எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, மிகவும் கடினமாக பயிற்சி எடுத்தேன்" என கூறுகிறார் ஹர்திக்

இவர் நீண்ட நாட்களாக சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க முடியாத காரணங்களால் எப்பொழுதும் மிகவும் கடுமையாக பயிற்சி செய்வதாகவும் இவற்றின் காரணமாகவே தனது ஆட்டம் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது எனவும் இவரே கூறியுள்ளார். தனது கடினமான பயிற்சிகளை கொண்டும், ஆட்டத்தில் இந்த மாறுதல்களை கொண்டும் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் சிறந்து விளங்கி வருகிறார் ஹர்திக் பாண்டியா.

2018 ஆம் ஆண்டு இவரது மோசமான ஆட்டத்தின் காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் இவரை கிண்டல் செய்தனர். தற்போது அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் ஹர்திக் பாண்டியா எனலாம். இவரது இந்த திறமையான ஆட்டத்தை சில நாட்களில் தொடங்கவிருக்கும் உலகக் கோப்பையில் தொடரும் பட்சத்தில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Quick Links

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications