சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஐந்தாவது முறையாக ஹாட்ரிக் சிக்சர் அடித்தார் ஹர்திக் பாண்டியா..

ஹார்திக் பாண்டியா
ஹார்திக் பாண்டியா

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டியை வென்ற இந்திய அணி தொடரை முன்னதாகவே வென்று விட்டது. இந்திய கிரிக்கெட் வாரியம் விராட் கோலிக்கு கடைசி 2 ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டது. நான்காவது ஒருநாள் போட்டியில் படுமோசமாக ஆடிய இந்திய அணி தோல்வி அடைந்தது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. கடந்த ஒரு நாள் போட்டியை போன்றே இந்தப் போட்டியிலும் இந்திய அணி 4 விக்கெட்டுகளை மிக விரைவில் இழந்தது. தமிழக வீரர் சங்கர் மற்றும் ராயுடு சரிவிலிருந்து இருந்து அணியை மீட்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயுடு 90 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பல சர்ச்சைகளைக் கடந்து மீண்டும் அணிக்கு திரும்பிய பாண்டியா களமிறங்கி நியூசிலாந்து வீரர் ஆஸ்டில் வீசிய பந்தை ஹாட்ரிக் சிக்சர் விளாசினார். சர்வதேச கிரிக்கெட்டில் ஐந்தாவது முறையாக இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பாண்டியா 5 சிக்சர்களுடன் 45 ரன்களை விளாசினார். இறுதியில் இந்திய அணி 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதற்கு முன்பு ஹர்திக் பாண்டியா அடித்த ஹாட்ரிக் சிக்சர்களை பற்றிக் காண்போம்.

1. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வீசிய பந்தில் முதல்முறையாக தொடர்ந்து 3 சிக்சர்களை அடித்தார்.

2. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர் சதாப் கான் வீசிய பந்தில் தொடர்ந்து 3 சிக்சர்களை அடித்தார்.

3. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் தனது முதலாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அந்த இன்னிங்சில் இலங்கை பந்துவீச்சாளர் புஷ்பகுமார வீசிய பந்தில் தொடர்ந்து 3 சிக்சர்களை அடித்தார்.

4. 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆடம் சாம்பா வீசிய பந்தில் தொடர்ந்து 3 சிக்சர்களை அடித்தார்.

5. இன்று நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஹாட்ரிக் சிக்சர்களை விளாசினார் இந்திய அணி வீரர் பாண்டியா.

பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி வழக்கம்போல் அவர்களது ஓபனிங் பேட்ஸ்மேன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடாமல் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

சர்ச்சைகளுக்குப் பிறகு அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஒரு நாள் போட்டியில் அற்புதமாக பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த ஒருநாள் போட்டியில் அவர் பேட்டிங்கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இது அவரது தன்னம்பிக்கையை மேலும் உயர்த்தும் மற்றும் சர்ச்சைகளை மறக்க அவருக்கு பேருதவியாக இருக்கும்