கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களுக்கும் தங்கள் மனதில் உள்ள ஒரு கேள்வி என்னவென்றால், போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தான் என்ன செய்வது பற்றி தான். பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் 40 வயதுக்கு முன்னரே ஓய்வு பெறத் தொடங்கிவிடுவர். அதற்கு பின்னர், எதிர்காலத்தைப் பற்றி இவர்கள் யோசிக்க வேண்டிய நிலைமை நிச்சயம் வரும். தான் நீண்டகால திட்டங்களை இதுவரை வகுக்கவில்லை. அப்போதைய சூழ்நிலையில் தான் தகுந்த முடிவினை எடுக்கப்போவதாக ஹர்மன்பிரீத் கவுர் தமது எதிர்கால நிலைப்பாட்டினை வெளிபடுத்தியுள்ளார்.
பஞ்சாபை சேர்ந்தவரான இவர், கிரிக்கெட் பயணத்தில் பல ஏற்றங்களும் இறக்கங்களும் சந்தித்துள்ளார். 2018ஆம் ஆண்டு முதல் இந்திய மகளிர் டி20 அணியை வழி நடத்தி வருகிறார். இவருக்கும் அனுபவம் வீராங்கனையான மிதாலி ராஜ் மற்றும் முன்னாள் பயிற்சியாளர் ரமேஷ் பவார் ஆகியோருக்கும் இடையே சில சலசலப்பு ஏற்பட்டது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. கடந்தாண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர், அனுபவ வீராங்கனை மிதாலி ராஜை இணைக்க தவறியதால் இத்தகைய குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. மேலும், அந்த போட்டியில் இந்தியா தோல்வியை தழுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது என பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும், தங்களது ஆகச் சிறந்த பங்களிப்பை மேற்கொண்டு தொடரை வெல்வதற்கு நாங்கள் உழைத்தோம் என்று ஹர்மன்பிரீத் கூறினார்.
மேலும் இவர் கூறியதாவது,
"2018 உலக கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் தொடங்குவதற்கு சில காலங்கள் முன்னரே எங்களது தொடர்ச்சியான பங்களிப்பினை ஏற்படுத்த தயாராகினோம். நாங்கள் கூடுதல் உத்வேகத்துடனும் நம்பிக்கையுடனும் தான் இருந்தோம். எனவே, எங்களது அனுபவத்தின் மூலம் கற்ற பாடத்தை அடுத்தாண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் வெளிப்படுத்துவோம்" என்றார்.
அந்த உலக கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய மகளிர் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 3 டி20 போட்டிகளில் உள்ளடக்கிய அந்த தொடரின் முறையே 17, 5 மற்றும் 2 ரன்களை மட்டுமே குவித்து மிகுந்த ஏமாற்றம் அளித்தார், கவுர். அதன் பின்னர், நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் காயம் காரணமாக ஹர்மன்பிரீத் விலகினார். இந்த குறுகிய கால இடைவெளி ஏமாற்றம் பற்றிய புரிதலை இவருக்குக் கற்றுக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது வரை பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகடமியில் பயிற்சி பெற்று வந்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.
"இந்த காயத்தில் இருந்து குணமடைவதற்கு ஏதுவாகவும் சற்று யோசிக்கவும் இந்த இடைவெளி பயன்பட்டது. எனது மறுசீரமைப்பு பற்றி நீண்ட காலம் யோசித்தேன். கிரிக்கெட்டை நேசித்து விளையாடும் நான் என் வாழ்நாள் முழுக்க தொடர்ந்து அவ்வாறே நேசிப்பேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெறும் கியா சூப்பர் லீக் தொடரில் பங்கேற்கும் 4 பேர் இந்திய வீராங்கனைகளில் ஹர்மன்பிரீத் கவுரும் ஒருவர். கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த தொடரில் பங்கேற்ற ஸ்மிருதி மந்தனா இந்த ஆண்டு வெஸ்டர்ன் ஸ்டார்ம் அணிக்காக விளையாட உள்ளார். அதேபோல், ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மாவும் இந்த தொடரில் இருந்து அறிமுகம் காணவுள்ளார். இளம்புயல் ஜெமிமா யார்க்ஷை டைமன்ட்ஸ் அணிக்காக பங்கேற்க காத்திருக்கிறார். இந்த ஆண்டு நடைபெற உள்ள கியா சூப்பர் லீக் தொடர் அடுத்த மாதம் ஆறாம் தேதி முதல் துவங்க இருக்கின்றது.