மயக்கம் அடைந்த சிறுமி : காப்பாற்றினர் ஹர்மன்பிரீட்

Harmanpreet Kaur
Harmanpreet Kaur

தற்பொழுது மேற்கு இந்திய தீவுகளில் மகளிருக்கான 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடை பெற்று வருகிறது.இதில் ஹர்மன்பிரீட் தலைமையில் ஆன இந்திய அணி பங்கேற்று வருகிறது.முதல் போட்டியில் ஹர்மன்பிரீட்டின் அபார சதத்தால் இந்திய அணி நியூசிலாந்து அணியைத் தோற்கடித்தது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 190 ரன்களை நியூசிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.அதிகபட்சமாக ஹர்மன்பிரீட் 103 ரன்களும் ரோடிரிகஸ் 59 ரன்களும் விளாசினார்.20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் சதம் அடித்த முதல் பெண்மணி என்ற பெருமையை ஹர்மன்பிரீட் பெற்றார். பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 160 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியைத் தழுவியது.அதிகபட்சமாக ஹேமலதா மற்றும் யாதவ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இரண்டாவது போட்டியில் உலகமே பார்க்க ஏங்கும் போட்டியாக நமது அண்டை நாடான பாகிஸ்தான் உடன் அமைந்தது.இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே விறுவிறுபுக்கு பஞ்சம் இருக்காது.ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையே நடக்கும் ஆஷஸ் கோப்பைக்கு நிகரான எதிர்பார்ப்பும் வீரர்களிடையே உத்வேகமும் அதிகம் காணப்படும்.இரு அணிகளும் இப்போட்டியை எளிதில் எடுத்த கொள்ளமாட்டார்கள்.இந்தப் போட்டியை இறுதி போட்டிக்கு நிகரகவே இரு அணிகளும் கருதுவர்.இந்தப் போட்டியின் வெற்றி இரு அணி வீரகளுக்கு மட்டுமின்றி அந்நாட்டு ரசிகர்களுக்கும் முக்கியமான ஒன்று.அதிலும் இவர்கள் உலக கோப்பையில் மோதினால் எதிர்பார்ப்பு இரு மடங்காக உயர்ந்து விடும்.அனைத்து உலக கோப்பை போட்டிகளும் ஆரம்பபிதற்கு முன்னர் அந்த நாட்டின் தேசிய கீதம் பாடுவது வழக்கம். தன் நாட்டுகாகக் களம் இறங்கும் வீரர்களுக்குப் பெருமையான நிகழ்வாக இது அமையும்.

இப்போட்டியின்போது தேசிய கீதம் பாடுவதற்காக இரு அணி வீரர்களும் மைதானத்திற்கு வந்தனர்.முதலில் பாகிஸ்தான் நாட்டின் தேசிய கீதம் வாசிக்கப் பட்டு.பின்பு இந்திய நாட்டின் தேசிய கீதம் அரங்கேறியது. அப்பொழுது ஹர்மண்பிரீட் முன்பாக நின்று கொண்டிருந்த சிறுமி அதிக வெயிலின் காரணகாமக மயக்க நிலைக்குச் சென்றால்.இதை உடனே கவனித்த ஹார்மன்பிரீட் தேசிய கீதம் முடிந்த பின்னர் அந்தச் சிறுமியைத் துக்கி கொண்டு வேகமாக ஒரு நபரிடம் உப்படைத்து மருத்துவரிடம் அழைத்துச் செல்லுமாறு கூறிவிட்டு போட்டிக்குத் தயாரானார்.அங்கு உள்ள அனைவரையும் ஹர்மன்பிரீட்டின் செயல் வெகுவாகக் கவர்ந்தது.

இப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தனது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்தது. பின்னர் 134 என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் பெற்று வெற்றியை ருசித்தது.அதிகபட்சமாக நமது மித்தாளி ராஜ் 56 ரன்களை விளாசினார்.பந்து வீச்சில் ஹேமலதா மற்றும் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மேலும் இந்திய அணி தனது இரு போட்டிகளிலும் வெற்றியைச் சுவைத்து அடுத்த போட்டியில் ஐயர்லாந்து அணியைச் சந்திக்க ஆயத்தம் ஆகி கொண்டு இருக்கிறது.இந்த இரு போட்டிகளும் மேற்கு இந்திய தீவுகளில் உள்ள கயானா நடைப்பெற்றது.

அந்த வீடியோ வருமாறு:

App download animated image Get the free App now