நடந்தது என்ன?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் இறுதி ஓவரில் வெற்றி பெற்றது. ஸ்ட்ரைக்கில் இல்லாத பேட்ஸ்மேன் பௌலர் பந்தை வீசுவதற்கு முன்பாக லைனை விட்டு வெளியேறினால் பந்துவீச்சாளர் உடனே ஸ்டம்ப் மீது நேரடியாக அடித்தால் அந்த நான் ஸ்ட்ரைக்(Non-Strike) பேட்ஸ்மேன் அவுட் என்னும் "மான்கட்" முறை மிகவும் சரியானதே என்று பெங்களூரு அணியின் வெற்றிக்கு பிறகு ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு தெரியுமா?
2019 ஐபிஎல் சீசனின் தொடக்கத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜாஸ் பட்லரை ஆட்டத்தின் முக்கியமான பகுதியில் மான்கட் முறையில் அவுட் செய்தது பெறும் விவகாரத்திற்கு உள்ளானது. பெரும்பாலானோர் அஸ்வினின் இந்த விக்கெட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் ஹார்ஷா போக்லே போன்ற சில கிரிக்கெட் வள்ளுநர்கள் அஸ்வின் கிரிக்கெட் விதிப்படியே விளையாடுகிறார். அவரது இந்த மான்கட் விக்கெட்டில் எந்த தவறும் இல்லை என கூறினர்.
கதைக்கரு
ஏப்ரல் 21 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி இறுதி ஓவர் வரை சென்றது. சென்னை அணி வெற்றி பெற கடைசி 6 பந்துகளில் 26 ரன்கள் தேவைப்பட்டது. சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி கடைசி ஓவரை மிகவும் சிறப்பாக எதிர்கொண்டார்.
தோனி உமேஷ் யாதவ் வீசிய இறுதி ஓவரில் பந்தை மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் பறக்க விட்டார். முதல் 5 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரிகள், 2 ரன்களை விளாசினார். சென்னை அணி வெற்றி பெற கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. நிறைய பேர் தோனி ஆட்டத்தை எளிதாக முடித்து விடுவார் என நம்பினர். கடைசி பந்தை உமேஷ் யாதவ் மிகவும் மெதுவாக வீச தோனியால் அந்த பந்தை சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. தோனி ரன் ஓட ஆரம்பித்தார். நான் ஸ்ட்ரைக்கிலிருந்து ஓடி வந்த ஷர்துல் தாகூரால் கீரிஸை சென்றடைவதற்குள் பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் பார்தீவ் படேல் ரன் அவுட் செய்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷர்துல் தாகூர் ரன் அவுட் ஆன போது 12 சென்டிமீட்டர் தொலைவிற்கு பின்னோக்கி இருந்தார். உமேஷ் யாதவ் கடைசி பந்தை வீசிய போது ஷர்துல் தாகூர் கிரிஸிற்குள் இருந்தார். சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் அஸ்வினின் நான் ஸ்ட்ரைக் பேட்டிங் மான்கட் முறைக்கு நன்றி தெரிவித்து டிவிட் செய்தனர். அத்துடன் இதுவே பெங்களூரு அணியின் வெற்றிக்கு காரணம் என்றும் கூறுகின்றனர்.
அஸ்வின் மான்கட் முறைக்கு முதன்முறையாக சாதகமாக குரல் கொடுத்த ஹார்ஷா போக்லே அதனை குறிப்பிட்ட பெங்களூரு அணியின் வெற்றிக்கு இந்த மான்கட் முறை பயமே முக்கிய காரணமாக இருந்தது என தற்போது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அடுத்தது என்ன?
அஸ்வினின் மான்கட் முறைக்கு ஆரம்பத்தில் நிறைய எதிராக கருத்து தெரிவித்தனர். ஆனால் அவர் கிரிக்கெட் விதிப்படியே விளையாடினார். இந்த முறையை பலர் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இந்த முறையினால் நான் ஸ்ட்ரைக் பேட்ஸ்மேன்கள் பந்து வீசுவதற்கு முன்பாக கிரிஸை விட்டு வெளியேற மாட்டார்கள்.