உலக கோப்பை தொடர் ஆனது, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற வீதம் தொடர்ந்து 44 ஆண்டுகளாக வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 12 ஆவது உலகக் கோப்பை தொடரானது இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில் இங்கிலாந்து நாட்டில் நடத்தப்படவுள்ளது.
இந்த உலக கோப்பை தொடரில் தங்களது அணி தான் வெல்ல வேண்டும், என்ற எண்ணத்தில் அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த அளவிற்கு உலக கோப்பை தொடரானது மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. இந்த முக்கியமான உலக கோப்பை தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1) பிரண்டன் மெக்கலம் ( ஸ்ட்ரைக் ரேட் 120.84 )
இவர் நியூசிலாந்து அணியை சேர்ந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அவர். இவர் நீண்ட நேரம் களத்தில் நிலைத்து நின்று விளையாட மாட்டார். இறங்கியவுடன் அடித்து விளையாட ஆரம்பித்து விடுவார். இவர் விளையாடும் பொழுது, அதை காணும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து தான். இவர் விளையாடுவது சிறிது நேரம் தான். விரைவிலேயே அவுட்டாகி வெளியேறிவிடுவார்.
ஆனால், இவர் விளையாடும் அந்த சிறிது நேரத்தில், மைதானத்தில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இந்த ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியில் இடம்பெற மாட்டார். உலக கோப்பை தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 120.84 ஆகும்.
#2) ஏபி டி வில்லியர்ஸ் ( ஸ்ட்ரைக் ரேட் 117.29 )
தென்ஆப்ரிக்க அணியின் நட்சத்திர வீரரான ஏபி டி வில்லியர்ஸ் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். தனது அற்புதமான விளையாட்டின் மூலம் உலகின் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் தன் வசம் கவர்ந்துள்ளார். தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஏபி டி வில்லியர்ஸ் தனது ஓய்வை அறிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை நடந்த உலக கோப்பை தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி ஒருமுறைக கூட கோப்பையை வென்றதில்லை என்பது சற்று சோகமான விஷயம்தான். இந்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கோப்பைத் தொடரில் ஏபி டி வில்லியர்ஸ் விளையாடவில்லை என்பது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக தான் இருக்கிறது. உலக கோப்பை தொடரில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 117.29 ஆகும்.
#3) சேவாக் ( ஸ்டிரைக் ரேட் 106.17 )
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான சேவாக். ஒரு காலகட்டத்தில் சேவாக் மற்றும் சச்சின் தான் எதிரணியை நடுங்க வைத்தனர். தொடக்கத்திலிருந்தே பவுண்டரிகளை விளாச ஆரம்பித்துவிடுவார் சேவாக். அதுவும் குறிப்பாக சேவாக்கின் சிறப்பம்சம் என்னவென்றால் முதல் பந்திலேயே பவுண்டரி அடிப்பது தான். ஆனால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும், ஐபிஎல் தொடரில் இருந்தும் சேவாக் ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது அதிரடியின் மூலம் தனக்கென்று பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியுள்ளார். உலக கோப்பை தொடரில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 106.17 ஆகும்.