கிரிக்கெட் விளையாட்டிற்கு அதிக ரசிகர்கள் இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த விளையாட்டில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஒரு கிரிக்கெட் போட்டி என்றால் அதில் மோதும் இரண்டு நாட்டு அணிகளிலும் திறமையான கிரிக்கெட் வீரர்கள் இருப்பார்கள். அந்த வீரர்களுக்குத்தான் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ரசிகர்கள் இருப்பார்கள். இவ்வாறு டுவிட்டரில் அதிக ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை பற்றி இங்கு விரிவாக காண்போம்.
#5) ஏ பி டி வில்லியர்ஸ்
இந்தப் பட்டியலில் 5வது இடத்தில் இருப்பவர் தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் டி வில்லியர்ஸ். இவர் கிரிக்கெட் ரசிகர்களால் MR.360 என்று அழைக்கப்பட்டு வருகிறார். இவ்வாறு அழைக்கப்படுவதற்கு காரணம் மைதானத்தில் அனைத்து திசைகளிலும் சிக்ஸர் அடிக்க கூடிய வல்லமை படைத்தவர் டிவில்லியர்ஸ். ஆனால் தற்போது இவர் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்துவிட்டார். இவரது இந்த ஓய்வு முடிவு அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு டுவிட்டரில் 6.3 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். இதன் மூலம் அதிக கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட வீரர்களின் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார் டிவில்லியர்ஸ்.
#4) தோனி
இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி. இந்தியா என்றாலே முதலில் ஞாபகத்தில் வருபவர் தோனி தான் அதற்கு முக்கிய காரணம் அவர் இந்திய அணிக்கு பல போட்டிகளில் கேப்டனாக வழி நடத்தி வெற்றி பெறச் செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணிக்கு அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் என்ற சாதனையைப் படைத்தவர் தோனி மட்டும் தான். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக வெற்றிகளை கொண்ட கேப்டன் இவர்தான். இவ்வாறு பல சாதனைகளை படைத்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவருக்கு டுவிட்டரில் 7.3 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். எனவே அதிக ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார் தோனி.
#3) ரோஹித் சர்மா
இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் துணை கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா. கிரிக்கெட்டில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இதுவரை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3 முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஒரு நாள் போட்டியில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவருக்கு டுவிட்டரில் 13 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். எனவே அதிக ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார் ரோகித் சர்மா.
#2) விராட் கோலி
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் நம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் ரன் மெஷின் என்று அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் அழைக்கப்பட்டு வருகிறார். இவர் கடந்த சில வருடங்களாக கிரிக்கெட்டில் பல சாதனைகளை முறியடித்து வருகிறார். உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார் விராட் கோலி. குறைந்த போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவருக்கு டுவிட்டரில் 28 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். எனவே இந்தப் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
#1) சச்சின் டெண்டுல்கர்
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவான் மற்றும் நமது இந்திய அணியை சேர்ந்த சச்சின் டெண்டுல்கர். சச்சின் டெண்டுல்கர் என்றாலே அவருக்கென்று கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளமே உள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் இவர் இதுவரை படைக்காத சாதனைகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 100 சதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் இவர்தான். இவருக்கு டுவிட்டரில் 30 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். எனவே இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் சச்சின் டெண்டுல்கர்.