ஐபிஎல் தொடரை பொறுத்தவரை மிகப் பிரபலமான, மற்றும் சிறப்பாக விளையாடும் முன்னணி வீரர்களுக்கு தான் அதிக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
ஏனெனில் அந்த வீரர்களின் விளையாட்டை காண்பதற்கு தான் மைதானத்திற்கு அதிக ரசிகர்கள் வருவார்கள். இவ்வாறு ஐபிஎல் தொடரில் எந்தெந்த வீரர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது என்பதை பற்றி இங்கு காண்போம்.
#1) மகேந்திர சிங் தோனி ( 122.84 கோடி )
ஐபிஎல் தொடரின் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் ரசிகர் கூட்டம் இருப்பதற்கு முக்கிய காரணம் தோனி தான். ஆரம்பத்திலிருந்தே தோனிக்கு கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் தனி மதிப்பும், மரியாதையும் உள்ளது. இவரது சிறப்பான விளையாட்டு என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடினமான இலக்கை சேஸ் செய்யும் பொழுது, கடைசி நேரத்தில் தனது அதிரடியின் மூலம் அணியை வெற்றி பெற செய்துவிடுவார் தோனி. பேட்டிங்கில் மட்டுமின்றி விக்கெட் கீப்பர் பணியிலும் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் இவருக்கு 122.84 கோடி, ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
#2) ரோகித் சர்மா ( 116.6 கோடி )
நமது இந்திய அணியின் துணை கேப்டனாகவும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார் ரோகித் சர்மா. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் இவர் பல சாதனைகளை புரிந்துள்ளார். இவர் ஒரு சில போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்யாவிட்டாலும், அணியை சரியான முறையில் வழிநடத்தி செல்லும் பணியை செய்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்து விளையாட வைக்கிறார். இவர் இதுவரை 173 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, அதில் மொத்தம் 4493 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் இவரது சராசரி 31.87 ஆகும். இவருக்கு ஐபிஎல் தொடரில் ஊதியமாக 116.6 கோடி வழங்கப்பட்டு வருகிறது.
#3) விராட் கோலி (109.2 கோடி)
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தலை சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார். பல முன்னணி கிரிக்கெட் வீரர்களின் சாதனைகளை முறியடித்து கொண்டே வருகிறார் விராட் கோலி. தனது சிறப்பான விளையாட்டின் மூலம், தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளார். ஐபிஎல் தொடரிலும் பெங்களூர் அணிக்காக தொடர்ந்து 11 வருடங்களாக விளையாடி வருகிறார்.
தற்போது பெங்களூர் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் விராட் கோலி. அனைத்து போட்டிகளிலுமே சராசரியான ரன்களை அடித்து வருகிறார். ஐபிஎல் தொடரில் இவருக்கு ஊதியமாக 109.2 கோடி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 163 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் இவர் குவித்த மொத்த ரன்கள் 4948 ஆகும். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் விராட் கோலி.