நடந்தது என்ன?
கிளார் போலோஷாக் பெண்கள் கிரிக்கெட்டில் கள நடுவராக இருந்து வருகிறார். இவர் தற்போது ஆண்கள் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் நடுவராக பணியாற்றி வரலாற்றில் இடம்பிடித்து உள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆண்களுக்கான உலக கிரிக்கெட் லீக் டிவிசன்-2ல் ஓமன் மற்றும் நபிமியா அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் போலோஷாக் பெண் நடுவராக பணியாற்றியுள்ளார்.
பிண்ணனி
2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி பெண்கள் டி20 உலகக் கோப்பையின் தகுதிச் சுற்றிற்காக 4 பெண்களை நடுவர்களாக நியமித்தது. முன்னாள் இங்கிலாந்து இடது கை சுழற்பந்து வீச்சாளர் சூய் ரெட்ஃபெர்ன், நியூசிலாந்தை சேர்ந்த கத்லின் கிராஸ், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளார் போலோஷாக் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஜாக்லின் வில்லியம்ஸ் ஆகியோர் பாங்காங்கில் கடந்த வருடத்தில் நடந்த பெண்கள் டி20 தகுதிச் சுற்றில் களநடுவர்களாக பணியாற்றினர்.
கதைக்கரு
உலக கிரிக்கெட் லீக் டிவிசன்-2ன் இறுதிப் போட்டிக்கு நமிபியா மற்றும் ஓமன் தகுதிப் பெற்றதன் காரணமாக ஐசிசி அந்த அணிகளுக்கு ஒரு நாள் போட்டிக்கான அந்தஸ்த்தை வழங்கியுள்ளது. இந்த செய்தி உலகம் முழுவதும் பரப்பப்படாததன் காரணமாக யாருக்கும் அவ்வளவாக தெரிய வாய்ப்பில்லை.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் நடுவர் கிளார் போலோஷாக் கிரிக்கெட்டில் அதிகப்படியாக பேசப்பட்டு வரும் நடுவராக திகழ்கிறார்.
போலோஷாக் ஆண்கள் கிரிக்கெட்டில் நடுவராக பணியாற்றுவதைப் பற்றி அவருக்கு ஏற்கனவே தெரியும் என அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் நினைத்திருப்பர். ஆனால் கடைசி நிமிடத்தில் தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதைப் பற்றி தன்னிடம் கூறியதாக கிளார் போலோஷாக் தெரிவித்துள்ளார். இதைப் பற்றி அவர் கூறியதாவது :
ஆண்கள் கிரிக்கெட்டில் முதல் பெண் நடுவராக பணியாற்றும் போது எனக்கு மிகவும் சிலிர்ப்பாக இருந்தது. நான் எவ்வளவு தூரம் வளர்ந்து வந்துள்ளேன் என்பது அப்போதுதான் எனக்கு தெரிந்தது. கிரிக்கெட்டில் பெண் நடுவர்கள் இல்லா நிலையை போக்கி அதிகபடியான பெண்களை நடுவர்களாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நியமிக்க வேண்டும். ஆண்கள் கிரிக்கெட்டில் பெண் நடுவர் இடம்பெறுவது வரலாற்றில் முதல்முறை என்பதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். அனைத்து பெண்களும் நடுவர் பதவிக்கு தாமக முன் வர இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என நம்புகிறேன்.
கிளார் போலோஷாக் ஆண்கள் கிரிக்கெட்டில் நடுவராக பணியாற்றுவது இது முதல் முறை அல்ல. இவர் ஏற்கனவே ஆஸ்திரேலிய ஆண்கள் உள்ளுர் கிரிக்கெட் தொடரில் கள நடுவராக பணியாற்றியுள்ளார்.
அடுத்தது என்ன?
கிளார் போலோஷாக் பெண்கள் ஒருநாள் போட்டியடன் சேர்த்து 15 முறை கள நடுவராக பணியாற்றியுள்ளார். ஆண்கள் கிரிக்கெட்டில் முதல் பெண் நடுவராக இவர் பணியாற்றியது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டு நிறைய பெண்கள் கிரிக்கெட் நடுவராக பணியாற்ற தாமாக முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.