ரோகித் சர்மா தனது மகளின் பெயரை ட்விட்டர் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.
பின்னணி :
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா சோபிக்காததால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதால் மீண்டும் ஆஸ்திரேலிய தொடருக்கு அணியில் சேர்க்கப்பட்டார். அடிலெய்டில் ஆடிய முதல் டெஸ்டில் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் டெஸ்டில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் ரோகித் சர்மா முதுகு வலி காரணமாக அடுத்து நடைபெற்ற பெர்த் டெஸ்டில் வாய்ப்பளிக்கப்படவில்லை.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மூன்றாவது டெஸ்டில் ரோகித் சர்மா உடல்நலம் தேறியதால் அணியில் சேர்க்கப்பட்டார். அந்த டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் 114 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி மெல்பர்ன் டெஸ்டில் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி தொடரில் 2-1 முன்னணி பெற்றுள்ளது. சிட்னியில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி செல்வதால் இந்திய அணி இந்த தொடரை வெல்வது உறுதியாகிவிட்டது. கடந்த 71 வருடங்களில் எந்த ஒரு இந்திய அணி கேப்டனும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்திய அணிக்கு இது ஒரு சாதனை தொடராகும். இதுவரை எந்த ஒரு ஆசியா கேப்டனும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது இல்லை என்பது இத்தொடரின் வெற்றிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும்.
கதையின் மையக்கரு:
ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா ஒரு அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்த காரணத்தால், ரோகித் சர்மா தாயகம் திரும்பினார். இந்த நிலையில் தனது மகளின் பெயரை டுவிட்டர் இணையதளத்தின் மூலம் ரோகித் சர்மா ரசிகர்களிடம் பகிர்ந்தார். இந்திய கிரிக்கெட் வாரியம் ரோகித் சர்மா மறுபடியும் ஜனவரி எட்டாம் தேதி அணியுடன் இணைவார் என்று அறிவித்துள்ளது.
அடுத்தது என்ன:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி மாதம் 12ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த மூன்று வருடங்களாக ஒரு நாள் மட்டும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோகித் இந்த தொடரிலும் தனது திறமையை வெளிக்காட்டுவார் என ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
கடந்த முறை இந்தியா ஆஸ்திரேலியாவில் ஒரு நாள் போட்டி தொடர் ஆடியபோது கோலி மற்றும் ரோஹித் ரன்களை குவித்தனர். ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒருநாள் போட்டியில் 6 சதங்கள் அடித்துள்ளார். இது இந்தியர் ஒருவர் அடித்த அதிகபட்ச சதமாகும். கோலி மற்றும் தெண்டுல்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 சதங்கள் அடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலி மற்றும் ரோஹித் இணை பல சாதனைகளை படைத்து வருகிறது. உலகின் சிறந்த ஒருநாள் போட்டி வீரர்களாக இருவரும் உள்ளனர். சதங்களில் சாதனை மேல் சாதனை படைத்துள்ளனர். கோலி மற்றும் ரோஹித் இத்தொடரில் மேலும் சதங்களை அடிக்க ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளனர்.