மேற்கு இந்திய தீவுகளை சேர்ந்த பார்படோசில் பிறந்தவரான சோப்ரா ஆச்சர், 2019 உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் தற்போது இடம் பெற்றிருக்கிறார். இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட்டில் சஸ்செக்ஸ் அணிக்காக இடம்பெற்று தமது ஆல்ரவுண்டர் திறமையை வெளிக்கொணர்ந்தார். இதுவரை 28 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 1003 ரன்களை குவித்துள்ளார். ஆட்டத்தின் இறுதி கட்ட நேரங்களில் களமிறங்கும் பேட்ஸ்மேனான இவர், பந்தை துவம்சம் செய்வதில் வல்லவர் ஆகிவிட்டார். டி20 போட்டிகளில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 140.74 என்ற வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. மணிக்கு 145 கிலோமீட்டர் அளவிற்கு பந்துவீசும் இவர், 131 விக்கெட்களையும் முதல்தர போட்டிகளில் கைப்பற்றியுள்ளார். அவற்றில் 10 முறை ஒரே இன்னிங்சில் 4 விக்கெட்களையும் ஐந்து முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார்.
டி20 போட்டிகளிலும் 90 இன்னிங்சில் களம் இறங்கி 118 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதுவும் குறிப்பாக ஆட்டத்தின் இறுதி கட்ட ஓவர்களை வீசுவதில் வல்லவராக உள்ளார். இங்கிலாந்து தந்தைக்கு பிறந்தவரான இவர், பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டை கொண்டிருந்தாலும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய விதிகளுக்கு உட்பட இவர் 2022ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து அணியில் விளையாட மாட்டார் என்று கருதப்பட்டது. ஆனால், அதன் பின்னர் ஏற்பட்ட மாற்றம் என்னவென்றால், மார்ச் மாதம் இங்கிலாந்து அணியில் இடம் பெற்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் இவர் இடம்பெறவில்லை. இதன் பின்னர், அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி தம்மை உலக கோப்பை தொடரில் இணைக்க செய்துள்ளார், சோப்ரா ஆச்சர்
ஐபிஎல் போட்டிகளிலும் இந்த ஆண்டு சிறப்பாக பங்கேற்று விளையாடியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான தனது முதலாவது சர்வதேச போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசி 29 ரன்களை கொடுத்து 7 விக்கெட்களை கைப்பற்றினார். மேலும், அந்த போட்டியில் இவர் பாகிஸ்தான் வீரர் ஒருவரை ரன்அவுட் செய்தது பாராட்டுக்குரியது. எனவே, தற்போது இவர் உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார்.
இவர் இதுவரை படைத்த சாதனைகள் பின்வருமாறு:
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தனது முதலாவது முதல்தர போட்டியிலேயே 5 விக்கெட்களை கைப்பற்றினார்.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 தொடரில் மிடில்செக்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் இறுதி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை புரிந்து சாதனை படைத்தார்.
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 7.2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
தனது முதலாவது ஐபிஎல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை வென்றார்.
2018 ஐபிஎல் சீசனில் 11 விக்கெட்டுகளை 6.76 என்ற எக்கனாமிக் உடன் கைப்பற்றி சாதனை படைத்தார். இது தொடரிலேயே இரண்டாவது சிறந்த எக்கனாமிக் ஆகும்.
கடந்த 3ம் தேதி தனது முதலாவது ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
கடந்த 5ஆம் தேதி தனது முதலாவது சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமானார்.