உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் இடம் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது?

ICC 2019 World cup: Ind vs Nz
ICC 2019 World cup: Ind vs Nz

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கிரிக்கெட் மீது அளவுகடந்த மதிப்பை வைத்துள்ள ரசிகர்களால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் 2019 உலகக் கோப்பை தொடரை நடத்த ஐசிசி தேர்வு செய்துள்ள இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் இடம். மழைக்காலங்கள் ஏற்கனவே நான்கு உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளை பலியாக்கியுள்ளது.

மொத்தமாக 2019 உலகக் கோப்பையில் இதுவரை 18 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 4 போட்டிகள் மழையினால் பாதிக்கப்பட்டு, உலகக் கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகள் கைவிடப்பட்ட உலகக் கோப்பை தொடர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. கடந்த 11 உலகக் கோப்பை தொடர்களில் எந்த வருடமும் 4 போட்டிகள் மழையினால் பாதிக்கப்பட்டதில்லை.

கிரிக்கெட் ரசிகர்கள் 4 வருடங்களாக இந்த மிகப்பெரிய உலகக் கோப்பை திருவிழாவிற்காக காத்துக்கொண்டு உள்ளனர். தங்களது விருப்ப அணிக்கு சப்போர்ட் செய்வதற்காக ரசிகர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். ஆனால் இங்கிலாந்தில் உலகக் கோப்பை நடத்த ஐசிசி தேர்ந்தெடுத்த முடிவு பெரும் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு உலகக் கோப்பை தொடரை நடத்துபவர்களை குறை கூற முடியாது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2019 உலகக் கோப்பை தொடரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடத்த ஏப்ரல் 2006 அன்றே முடிவெடுத்து விட்டது. ஆமாம் இது உண்மைதான்! உலகின் டாப் கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி 2007 முதல் 2019 வரை நடக்கும் அனைத்து ஐசிசி தொடர்களும் எங்கு நடத்த வேண்டும் என முன் கூட்டியே 30 ஏப்ரல் 2006 அன்றே முடிவு செய்துவிட்டனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 1983ற்குப் பிறகு சுழற்சி முறையில் உலகக் கோப்பை நடைபெறும் இடங்களை தேர்வு செய்து வருகிறது. அந்த முறைப்படி ஒவ்வொரு கிரிக்கெட் நாடுகளும் 20 வருடங்களுக்குள் ஒரு முறையாவது தங்களது நாட்டில் உலகக் கோப்பை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் சர்வதேச அளவில் இந்திய அணிக்கு உள்ள அந்தஸ்தின் படி இந்த கொள்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் பின்பற்ற போவதில்லை என உறுதிபட தெரிவித்தது.

1987 உலகக் கோப்பை தொடரை நடத்த இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து 1992 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை தொடரை நடத்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பின் 1996ல் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் இனைந்து உலகக் கோப்பையை நடத்தின. 1999ல் இங்கிலாந்தும், 2003ல் தென்னாப்பிரிக்காவும், 2007ல் மேற்கிந்தியத் தீவுகளும் உலகக் கோப்பை தொடரை நடத்தின.

2011 உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வசம் வந்தது. ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிற்கு ஆசிய அணிகளான வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளின் மூலம் அதிக இலாபம் வந்தது. எனவே ஐசிசி தேர்தல் ஒன்றை நடத்த திட்டமிட்டது. அந்த தேர்தலில் அதிக வாக்குகள் பெறும் அணி உலகக் கோப்பையை நடத்த தகுந்த அணியாக தேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆசிய அணிகள் 10 வாக்குகளை பெற்றது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து 3 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய அணி 2011 உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பெற்றது.

சுழற்சி முறை கொள்கைப்படி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து 2015 உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை பெற்றன.1999 உலகக் கோப்பை தொடரை நடத்திய இங்கிலாந்து அணி அதன் பின் தற்போது 2019 உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பெற்றுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியின் ஆதிக்கம் மூலம் 2023 உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது. 2027 உலகக் கோப்பை தொடரை எந்த அணி நடத்தும் என இதுவரை ஐசிசி முடிவு செய்யவில்லை. சுழற்சி முறை கொள்கை சரியாக தொடர்ந்திருந்தால் 2011 உலகக் கோப்பை தொடரை ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகளும், 2015 உலகக் கோப்பை தொடரை ஆசிய அணிகளும் நடத்தியிருக்கும். அப்படி பார்த்தாலும் இங்கிலாந்துதான் 2019 உலகக் கோப்பை தொடரை நடத்தியிருக்க வேண்டும்.

ஐசிசி-யின் இந்த சுழற்சி முறை கொள்கையினால் காலநிலைக்கு ஏற்ப உலகக் கோப்பை தொடரை நடத்தும் இடங்களை தேர்வு செய்ய முடியவில்லை. ஐசிசி இனிவரும் காலங்களிலும் இந்த சுழற்சி முறை கொள்கையினை பின் தொடர்ந்தால் 2027 உலகக் கோப்பை தொடரை ஆசிய கண்ட அணிகள் நடத்தும்.

Quick Links