உலக கோப்பை தொடரில் எந்நேரத்திலும் ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் செயல்படக்கூடிய அணிகளில் ஒன்று வங்கதேசம். ஒவ்வொரு உலக கோப்பை தொடர்களில் போலவே இந்த உலக கோப்பை தொடரிலும் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது, வங்கதேசம் தெற்காசிய நாடான வங்கதேசம், கடந்த சில காலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் தனது பங்களிப்பை சிறப்பாக ஆற்றி வருகிறது. உலக கோப்பை தொடருக்கு முன், நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் பங்கு பெற்ற முத்தரப்பு கிரிக்கெட்டில் கோப்பையை வென்று அசத்தியது, இந்த அணி.
2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியிலும் கூட அரை இறுதிப் போட்டி வரை தகுதி பெற்றிருந்தது, வங்கதேசம். 2019 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றிகரமாக தொடரினை தொடங்கியது. அதன் பின்னர், நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன்களை சேஸ் செய்து சாதனையையும் படைத்தது. இலங்கை அணிக்கு எதிரான போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இதனால், வங்கதேச அணியின் வெற்றி கேள்விக்குறியானது. நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை வாரி வழங்கிய போதிலும் தனது அயராத பேட்டிங்கை வெளிப்படுத்தியது, வங்கதேசம்.
இதுவரை நடைபெற்ற 6 போட்டிகளில் 2 வெற்றி 3 தோல்வியுடன் ஒரு போட்டி மழையால் பாதிக்கப்பட்ட வை என கலவையான விமர்சனத்தை கொண்ட மோர்தசா தலைமையிலான வங்கதேச அணி, தற்போது இந்த அணி புள்ளி பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது. அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் தொடர் ஆட்டத்தால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது, இந்த அணி. இருப்பினும், இனி வரும் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை ஓரளவுக்கு உறுதி செய்ய முடியும். எனவே, வங்கதேசம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதற்கான வாய்ப்புகளை இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.
#1.பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் குறைந்தது ஒரு தோல்வியை பெற்றிருக்க வேண்டும்:
வங்கதேச அணி புள்ளி பட்டியலில் 11 புள்ளிகளை பெற்றாலும் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இனிவரும் போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் தோற்கவேண்டும். இவ்விரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளைப் தற்போதுவரை குவித்துள்ளது. இன்னும் 4 ஆட்டங்கள் இவ்விரு அணிகளுக்கும் எஞ்சிய நிலையில், குறைந்தது ஒரு போட்டியிலாவது தோல்வி அடைந்தால் மட்டுமே வங்கதேச அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.
#2.இலங்கை ஒன்று அல்லது இரு தோல்விகளை சந்திக்க வேண்டும்:
நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அபார பந்துவீச்சு தாக்குதலால் சிறந்ததொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைப் படைத்தது, இலங்கை அணி. தற்போது புள்ளி பட்டியலில் இரு வெற்றிகளை கொண்டு ஆறு புள்ளிகளைப் பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளது. இனிவரும் போட்டிகளில் இந்த அணி வெற்றி பெற்றால் 12 புள்ளிகளை பெற நேரிடும். எனவே, வங்கதேச அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற இலங்கை ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் நிச்சயம் தோற்க வேண்டும்.
#3.இங்கிலாந்து அணி தொடர்ந்து தோல்விகளை சந்திக்க வேண்டும்:
இம்முறை உலகக் கோப்பை தொடரை நடத்தும் அணியும் சர்வதேச ஒருநாள் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் அணியான இங்கிலாந்து, நேற்றைய போட்டியில் இலங்கை அணியிடம் தோற்று அதிர்ச்சி அளித்தது. நேற்றைய போட்டியில் தோற்று இருப்பதால் தொடர்ந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப இன்னும் சற்று சிரமப்படும். புள்ளி பட்டியலில் இந்தியாவை விட அதிக புள்ளிகளைப் பெற்று முன்னிலையில் இருக்கும் இங்கிலாந்து, இனி வரும் மூன்று போட்டிகளில் பல மிகுந்த ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளை சந்திக்க உள்ளது. இதற்கு எதிர்மாறாக, இந்திய அணி தன்னை விட பலம் குறைந்த அணிகளான வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணியுடன் சந்திக்க இருப்பதால் ஆட்டத்தை தனக்கு சாதகமாக முடிக்கும் நிலையில் உள்ளது, இந்தியா. இதன் காரணமாக, இங்கிலாந்து அணி பலம் வாய்ந்த அனைத்து அணிகளையும் தோற்கடிப்பது சற்று கடினம் தான்.
எனவே, இனிவரும் போட்டிகளில் அனைத்திலும் இந்த அணி தோல்வியை சந்தித்தால் நிச்சயமாக இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் உடன் இணைந்து அரையிறுதிக்கு வங்கதேச அணி தகுதி பெறும். கிரிக்கெட் போட்டிகள் என்றுமே எதிர்பார்த்தது போல் அமைவதில்லை. எனவே, மேற்கண்டவை எல்லாம் சற்று மாறினாலும் வங்கதேச அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது சற்று பின்னடைவுதான்.