சென்னை சூப்பர் கிங்ஸ் 2019 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் விளையாடமல் போக வாய்ப்புகள் உண்டா! ஓர் அலசல்

MS Dhoni
MS Dhoni

நேற்றைய (ஏப்ரல் 23) ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதற்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி அட்டவணையில் முதலிடத்தை பிடித்தது. சென்னை அணி 2019 ஐபிஎல் சீசனில் இதுவரை 11 லீக் போட்டிகளில் பங்கேற்று 3 தோல்விகள் மற்றும் 8 வெற்றிகளை பெற்று 16 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த 16 புள்ளிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு கிட்டத்தட்ட தகுதிபெறும் புள்ளிகளாக இருப்பினும் உறுதியாக சொல்ல முடியாது. சென்னை அணி மீதமுள்ள 3 போட்டிகளில் 1 போட்டியில் வென்றால் கூட டாப் 4ல் ஒரு இடத்தை உறுதி செய்துவிடும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் 2019 ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் திறமை கொண்டு விளங்குகிறது. இருப்பினும் சென்னை பிளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறும் வாய்ப்பை இழப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியளிக்கும் விதமாக கூட இருக்கலாம். ஒருவேளை கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடைபெறுமெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் சுற்றை இழக்க நேரிடும்.

1. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிரான 3 லீக் போட்டிகள் 2019 ஐபிஎல் தொடரில் மீதமுள்ளது. இந்த 3 போட்டிகளிலும் சென்னை அணி தோற்க நேரிட்டால் 16 புள்ளிகளுடன் சென்னை அணி இந்த வருட ஐபிஎல் சீசனை முடிக்கும்.

2. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 4 போட்டிகள் மீதமுள்ளன. கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணிக்கு எதிராக 2 போட்டிகளும், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தலா 1 போட்டிகளும் உள்ளது. இதில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தோல்வியும் மும்பை இந்தியன்ஸ் சந்திக்குமேயானால் புள்ளி அட்டவனையில் 18 புள்ளிகளுடன் சென்னை முந்தைய இடத்தில் மும்பை அணி இருக்கும்.

3. டெல்லி கேபிடல்ஸ் இந்த ஐபிஎல் சீசனில் மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 20 புள்ளிகளுடன் புள்ளி அட்டவனையில் முதலிடத்தை பிடிக்கும்.

4. கிங்ஸ் XI பஞ்சாப் விளையாடிய 10 போட்டிகளில் 5ல் வெற்றியும், 5ல் தோல்வியும் பெற்று 10 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் மீதமுள்ள 4 போட்டிகளிலும் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் 18 புள்ளிகளை பெற்று சென்னை அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

5. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 10 புள்ளிகளுடன் புள்ளி அட்டவனையில் 4வது இடத்தில் உள்ளது. இந்த அணிக்கு 4 லீக் போட்டிகள் மீதமுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்று பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வியையே தழுவினாலும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 16 புள்ளிகளை பெற்று புள்ளி அட்டவனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முந்தைய இடத்தில் இருக்கும். ஏனெனில் ஹைதராபாத் அணி அருமையான நெட் ரன் ரேட்டை வைத்துள்ளது.

மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் நடைபெறுமேயானால் டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் XI பஞ்சாப், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளி அட்டவனையில் 5வது இடத்தை பிடிக்கும். கிரிக்கெட் விளையாட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த ஐபிஎல் சீசனில் சில அணிகள் வெற்றி பெறும் தருவாயில் இருந்து தோல்வியையும், தோல்வி பெறும் தருவாயில் வெற்றியையும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Quick Links