#2 தோனியின் பேட்டிங் ஃபார்ம்
தோனியின் தற்போதைய சுமாரான பேட்டிங் ஃபார்மை பற்றி அனைவரும் அறிவர். ஆனால் அதைப்பற்றி பேச யாரும் விரும்புவதில்லை. ஏனென்றால் அவர் இந்திய அணிக்கு பெற்று தந்த பெருமைகளை வேறு யாரும் பெற்றுத்தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அனுபவம் மற்றும் போட்டியின் விழிப்புணர்வு போன்றவை இந்திய அணிக்கு மிகவும் அவசியம். மேலும் அதிவேக ஸ்டெம்பிங் மற்றும் ஸ்பின்னர்களுக்கு வழிகாட்டுவது போன்ற திறமைகள் கொண்டவர் ஆவார்.
கேப்டன் பதவியிலிருந்து விலகிய தோனி இன்றும் மக்கள் மனதில் ஓர் தலைவராகவே வாழ்ந்து வருகிறார். ஆனால் இவர் தற்போது இந்திய அணிக்கு பேட்டிங்கில் எந்த விதத்திலும் உதவுவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
சென்னை ரசிகர்களால் ‘தல’ என அழைக்கப்படும் தோனி கடந்த முறை சிறப்பாக செயல்பட்டு ஐபிஎல் கோப்பையை பெற்றுதந்தார். தோணி அவரது பழைய ஃபார்மிற்கு வந்தால் எதிர் அணிகளுக்கு இந்தியாவின் முன்வரிசை வீரர்களை விட இருமடங்கு அச்சுறுத்தலாக இருப்பார். உலக கோப்பைக்கு முன்னராக தோணி அவரது பழைய ஃபார்மிற்கு திரும்புவார் என நம்பலாம்.
#3 மூன்றாம் வேகப்பந்து வீச்சாளர்
புவனேஸ்வர் குமார் மற்றும் ஜஸ்ப்ரிட் பும்ராவுடன் இணைய போகும் அந்த மூன்றாம் வேகப்பந்து வீச்சாளர் யார் ? என்ற கேள்விக்கு இந்திய அணியிடம் பதில் இல்லை. இந்தியாவும் முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் முதல் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் வரை பலரை முயற்சித்து பார்த்து பதிலின்றி தவித்துவருகிறது.
இந்த இடமும் பேட்டிங்கில் நான்காம் இடம் போல் சிறந்த வீரரின்றி காலியாக உள்ளது. இதற்கு முன்னர் இந்திய அணி இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரு ஸ்பின்னர்களை வைத்தும் மேலும் 50 ஓவர்களை பூர்த்தி செய்ய பாண்டியா மற்றும் ஜாதவ் உதவியாக இருந்தனர். இந்த யுக்தி இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுதந்தது.
ஆயினும்கூட மூன்றாம் வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணிக்கு மிகவும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. கலீல் அஹ்மது கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் மேற்குஇந்திய தீவுகள் இடையே நடந்த போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் ஷமி தனது பழைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். புவனேஸ்வர் மற்றும் பும்ரா ஐபிஎல் போட்டிகளில் போது ஓய்வு எடுக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் மற்ற பௌலர்களுக்கு ஐபிஎல் ஓர் சிறந்த வாய்ப்பு. இதில் சிறப்பாக செயல் படுபவர் நிச்சயமாக மூன்றாம் வேகப்பந்து வீச்சாளராக உலக கோப்பை அணியில் இடம் பெறுவார் என்பது உறுதி.