#4 குல்தீபின் ஸ்பின் ஜோடி யார்?
2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து. இத்தொடரில் இந்திய அணி தனது ரிஸ்ட் ஸ்பின் ஜோடியான குல்தீப் மற்றும் சஹாலை வைத்து அனைத்து அணிகளையும் அச்சுறுத்தியது. இவர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி முன்னணி பேட்ஸ்மேன்களை தினறடித்தனர். ஆனால் கடந்த ஆசிய கோப்பை போட்டியின் போது ஹார்டிக் பாண்டியா காயம் காரணமாக விலகினார். அவரிடத்தை நிரப்ப இந்திய அணி ஜடேஜாவை முயற்சி செய்தது இந்த முயற்சி சிறப்பாக செயல்பட சஹால் தனது இடத்தை இழந்தார். ஜடேஜாவின் ஆல்ரவுண்ட் திறமையினால் இந்திய அணியில் தற்போது இடம்பெற்று வருகிறார். இந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்படுபவரே உலகக்கோப்பையில் குல்தீபுடன் ஜோடி சேருவர் என்பது தான் உண்மை.
#5 ஆல்-ரவுண்டர்
இந்தியாவின் ஆல்-ரவுண்டர் யார்? ஹர்திக் பாண்டியாவா?, கேதார் ஜாதவா?, அல்லது ரவீந்திர ஜடேஜாவா? இல்லை இதில் ஏதேனும் இருவர் இடம் பெறுவார்களா என பொறுத்து தான் பார்க்கவேண்டும். இவர்களின் திறமைகளை வைத்து பார்த்தால் பாண்டியாவும், ஜாதவும் கேப்டனின் விருப்பமாக இருந்து வருகின்றனர். பேட்டிங்கில் ராயுடுவும், தோனியும் சிறந்த ஃபார்மில் இருந்தால் இந்தியா அணி இங்கிலாந்தில் இருக்கும் பிளாட் பிட்ச்களில் 5 பௌலர்கள் கொண்டு விளையாடி எதிர் அணியை குறைந்த ஸ்கோர்க்குல் கட்டுப்படுத்த முயற்சிக்கும்.
அதேபோல் ஜடேஜாவையும் எளிதாக நீக்கிவிட முடியாது அவரது ஆல்-ரவுண்ட் திறமையால் அணியில் திரும்பவும் இடம்பெற்று உள்ளார். மேலும் எதிர்பாராத விதமாய் க்ருனால் பாண்டியாவும் இடம் பெறலாம். இந்தியாவின் உலக கோப்பை ஆல்-ரவுண்டர் யார் என்பதை தீர்மானிக்க ஐபிஎல் போட்டி சிறந்த தேர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
எழுத்து: கிருஷ்ணன்
மொழியாக்கம்: காமாட்சி சுந்தரம்